CSK vs DC LIVE Score: சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற டெல்லி!
IPL 2024, CSK vs DC LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17வது ஓவரின் கடைசி பந்திலும் தோனி பவுண்டரிக்கு விளாசி அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய தோனி களமிறங்கி, தான் எதிர் கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.
போட்டியின் 17வது ஓவரின் முதல் பந்தில் சிவம் துபே தனது விக்கெட்டினை 17 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 79 ரன்கள் தேவைப்படுகின்றது.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை அணியின் வீரர் சமீர் ரிஸ்வி தனது விக்கெட்டினை கோல்டன் டக் முறையில் இழந்து வெளியேறினார்.
அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 30 பந்தில் தனது விக்கெட்டினை 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 11வது ஓவரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை 34 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை எடுத்து விளையாடி வருகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிவில் இருந்து மீண்டு அரைசதம் விளாசியுள்ளது.
8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டினை இழந்து 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை அணி தனது முதல் பவுண்டரியை போட்டின் நான்காவது ஓவரில் விளாசியுள்ளது.
ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை மூன்றாவது ஓவரில் 12 பந்தில் 2 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவரது விக்கெட்டினை கலீல் அகமது கைப்பற்றினார்.
முதல் ஓவர் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தனது விக்கெட்டினை ஒரு ரன் மட்டும் சேர்த்த நிலையில் கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் வெளியேறினார்.
192 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது.
19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் கடந்ததும் அடுத்த பந்தில் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 32 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 31 பந்தில் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
18 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பத்திரனா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் மிட்செல் மார்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.
13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி 121 ரன்கள் எடுத்துள்ளது.
போட்டியின் 10வது ஓவரில் வார்னர் 35 பந்தில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை முஸ்தபிசூர் பந்தில் ஆட்டமிழந்தார்.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் சேர்த்து அட்டகாசமாக விளையாடி வருகின்றது.
32 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி அரைசதம் விளாசி அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
8 ஓவர்களில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்து, 10 ரன்ரேட் அடிப்படையில் விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் குவித்து வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5.2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐந்து ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது.
ப்ரித்வி ஷா தனது முதல் பவுண்டரியை 4வது ஓவரில் விளாசினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 19 ரன்கள் சேர்த்துள்ளது.
வார்னர் போட்டியின் மூன்றாவது ஓவரில் முதல் சிக்ஸர் விளாசினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் முதல் ஓவரின் கடைசி பந்தில் வார்னர் டெல்லி அணிக்காக பவுண்டரி விளாசியுள்ளார்.
டெல்லி அணியின் இன்னிங்ஸை ப்ரித்வி ஷா மற்றும் வார்னர் தொடங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்.
டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர் / கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகரா ரெட்டி மைதானத்தில் இரு அணிகளும் களமிறங்கியது. புள்ளிப்பட்டியலிலைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளையும் தனது சொந்த மைதானமான சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் முறையாக வெளி மைதானத்தில் விளையாடுகின்றது.
அதேபோல் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் டெல்லி அணி வெளி மைதானத்தில் விளையாடியது. இந்நிலையில் இந்த சீசனில் டெல்லி அணியின் சொந்த மைதானமாக விசாகப்பட்டினம் மைதானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அணி தனது சொந்த மைதானத்தில் முதல் முறையாக களமிறங்குகின்றது.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 223 ரன்களை பதிவு செய்துள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக 110 ரன்களையும் பதிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிகபட்சமாக 198 ரன்களையும், குறைந்தபட்சமாக 83 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சென்னை அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாக பதிவாகும். டெல்லி அணி வெற்றி பெற்றால், இந்த சீசனில் டெல்லி அணியின் முதல் வெற்றியாக பதிவாவது மட்டும் இல்லாமல், தனது ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்கும். அதேபோல் சென்னை அணி தோல்வியைத் தழுவினால் இந்த சீசனில் சென்னை அணி சந்திக்கும் முதல் தோல்வியாக அமையும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -