ஐபிஎல் சீசன் மெகா ஏலாம்:


ஐபிஎல் சீசன் 18ன் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மாற்றம் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வெளியேற்ற வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ரஹானே:


ரஹானேவை அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. சீனியர் வீரர் என்பதால் அவரிடம் இருந்து பெரிய போட்டிகளில் வெற்றிகரமான ஆட்டத்தை  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்தது. ஆனால் ஐபிஎல் சீசன் 17ல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த முறை அணியில் இருந்து ரஹானே விடுவிக்கப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.


மொயின் அலி:


இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. இவர் மீதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகுந்த எதிர்பார்ப்பு வைத்தது. ஆனால் இவரும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. 8 போட்டிகளில் களம் கண்ட மொயின் அலி 128 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை கருத்தில் கொண்ட இந்த முறை இவரை  சென்னை அணி வெளியேற்றும் வாய்ப்பு இருக்கிறது.


டேரில் மிட்சல்:


நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் 14 கோடி ரூபாய்கு ஏலத்தில் எடுத்தது.  ஆனால் அவர் நடந்து முடிந்த சீசனில் 318 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கோடிகளை கொட்டி கொடுத்து வாங்கியும் எதிர்பார்த்த அளவிற்கு அவர் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மிட்சல் விடுவிக்க பட வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கூறுகின்றனர்.


ஷர்துல் தாக்கூர்:


மும்பையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கடந்த சீசனில் 9 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதிக ரன்களும் எடுக்கவில்லை. ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டதால் அவரிடம் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே சிஎஸ்கே ஷர்துல் தாக்கூரை விடுவிக்க வாய்ப்புள்ளது.