ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை அணியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு நடப்பாண்டிலும் எழுந்துள்ளது.


ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி:


ஐ.பி.எல். தொடர் அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வரும் தோனி தலைமையிலான சென்னை அணி, நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதோடு, இந்திய அணிக்காக ஆடிய ரவிச்சந்திரன் அஷ்வின், முரளி விஜய் மற்றும் பத்ரிநாத் போன்ற தரமான தமிழக  வீரர்களை அடையாளம் காணவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது. அனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, இளம் வீரர்களுக்கும், தமிழகத்தை மையமாக கொண்ட அணியில் தமிழக வீரர்கள் யாரும் ஆடும் லெவனில் இடம்பெறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.


மினி ஏலத்தில் சென்னை அணி:


கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மினி ஏலத்தில் கூட, தமிழகத்தை சேர்ந்த பல இளம் வீரர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால், தமிழக வீரர்கள் யாரையும் ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதிலாக, இந்திய அணிக்காக விளையாடி வரும் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கும், ஷேக் ரஷீத் ரூ.20 லட்சத்திற்கும், நிஷாந்த் சிந்து ரூ. 60 லட்சத்திற்கும், கைல் ஜேமிசன் ரூ.1 கோடிக்கும் மற்றும் அஜய் மண்டல் என்பவரை ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 


மற்ற அணிகளில் தமிழக வீரர்கள்:


முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கவில்லை. இந்நிலையில், ஏலத்தின் முடிவில் தோனி தலைமையிலான சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை . 


குஜராத்:


விஜய் சங்கர்
சாய் கிஷோர்
சாய் சுதர்ஷன்


ராஜஸ்தான் ராயல்ஸ்:


முருகன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


ஜெகதீசன் நாராயண்
வருண் சக்ரவர்த்தி


சன் ரைசர்ஸ் ஐதராபாத்:


தங்கராசு நடராஜன்
வாஷிங்டன் சுந்தர்


பஞ்சாப் கிங்ஸ்:


ஷாருக்கான்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ:


தினேஷ் கார்த்திக்


ரசிகர்கள் கோரிக்கை:


”3 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டு சென்னை அணிக்கான போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மைதானங்களை காட்டிலும், சேப்பாக்கம் மைதானத்தில் ரன் குவிப்பது என்பது சற்றே கடினமானது. எனவே, உள்ளூர் போட்டிகளில் சேப்பாக்கம் மைதானங்களில் அதிகம் விளையாடிய தமிழக வீரர்களுக்கு, வாய்ப்பளிப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக வீரர்கள் யாரும் சென்னை அணியில் இடம்பெறாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாகவும்” ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.


சென்னை அணி விவரம்:


எம்.எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, பகத் வர்மா, தீபக் சாஹர்,  ரவீந்திர ஜடேஜா, சிசண்டா மகலா, அஜய் மண்டல், முகேஷ் சௌத்ரி, மதீஷா பத்திரனா, டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, பென் ஸ்டோக்ஸ், மஹீஷ் தீக்ஷனா