சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பதுக்கப்படவில்லை என சிஎஸ்கே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்ட தகவலில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு டிக்கெட்டும் பதுக்கப்படவில்லை. வேறு ஒரு தனியார் நிறுவனம் மூலம் மட்டுமே கிரிக்கெட் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ” என்றது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டி வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம் ) நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் கவுண்டர் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. 


ஆன்லைனில் டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in வழியாக வாங்கலாம் என்றும், அதேநேரத்தில் காலை 9:30 மணி முதல் இரண்டு சேப்பாக்கம் ஸ்டேடியம் கவுண்டர்களில் டிக்கெட்கள் விற்கப்பட்டது. மேலும், இந்த முறை கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


டிக்கெட் கிடைக்காத அதிருப்தி: 


சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு போதுமான இருக்கைகள் இல்லை. டிக்கெட்டுகள் திடீரென விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே மணிக்கணக்கில் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டேடியம் வாயில்களுக்கு வெளியே காத்திருந்த பல பார்வையாளர்கள், அணிகள் மற்றும் மைதான அதிகாரிகளின் மோசமான கையாளுவதாக சமூக ஊடங்கங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 


மேலும், சமூக வலைத்தளங்களில் CSK பெரும்பான்மையான டிக்கெட்டுகளை வைத்திருப்பதன் மூலம் கார்ப்பரேட் ஸ்பான்சர்களுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினர். நான்கு ஸ்டாண்டுகளில் ஆன்லைன் முன்பதிவுக்கான இருக்கைகள் இருந்தும் டிக்கெட்கள் கிடைக்கவில்லை என கூறப்பட்டது. 


மேலும், இந்த டிக்கெட்களானது விஐபி அடிப்படையில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு சிலது என ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளிலும் 20% BCCI மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) பெற்று விடுகின்றன என்று CSK CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். போதுமான அளவு டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன. இம்முறை கூடுதல் வாங்குவதற்கான டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க TNCA முடிவு செய்துள்ளது.


விற்பனை விவரங்கள்:


 C/D/E லோயர் ஸ்டாண்ட், ரூ. 1500, கவுண்டர், ஏப். 18; C/D/E அப்பர் ஸ்டாண்ட், ரூ. 3000, ஆன்லைன், ஏப். 18; I/J/K கீழ் நிலை, ரூ. 2500, ஆன்லைன் மற்றும் கவுண்டர், ஏப். 18; I/J/K மேல்நிலை, ரூ. 2000, ஆன்லைன் மற்றும் கவுண்டர், ஏப். 18; கேஎம்கே மொட்டை மாடி, ரூ. 5000, ஆன்லைன், ஏப். 18.