டெவால்ட் பிரெவிஸை ஐபிஎல் விதிகளின் படி தான்  ஒப்பந்தம் செய்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளக்கமளித்துள்ளது.

Continues below advertisement

பிரெவிஸ் சர்ச்சை:

இந்தியன் பிரீமியர் லீக் 2025-ன் போது காயமடைந்த  குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போன பிரெவிஸை, போட்டியின் இடையில் மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்தது. 

ஆனால் பிரவிஸ்சை ஒப்பந்தம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக "செலுத்தத் தயாராக" இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்ததைத் தொடர்ந்து சிஎஸ்கே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

போட்டியின் இரண்டாம் பாதியில் பிரெவிஸின் சேவைகளைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக "செலுத்தத் தயாராக" இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்ததைத் தொடர்ந்து சிஎஸ்கே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அஷ்வின் சொன்னது என்ன?

அஸ்வின் தனது யூடியூப் சேனலில், காயம் காரணமாக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ய அதிக பணம் கொடுக்க சிஎஸ்கே  தயாராக இருந்ததாக கூறினார். "பிரெவிஸ் பற்றி நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். கடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக அவர் சிறப்பாக விளையாடினார். உண்மையில், சில அணிகள் அவருடன் பேசிக்கொண்டிருந்தன. விலை காரணமாக சில அணிகள் அவரை அணுகின அவர் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டியிருந்தபோது, அடிப்படை விலையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் என்ன நடக்கிறது என்றால், நீங்கள் முகவர்களிடம் பேச வேண்டி இருக்கும்,, வீரர் எனக்கு எக்ஸ் தொகையை கூடுதலாகக் கொடுத்தால் தான் வருவதாக,"  அஸ்வின் தனது யூடியூப்பில் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.

"அடுத்த சீசனில் விடுவிக்கப்பட்டால், நல்ல விலைக்கு போவார் என்பது அந்த குறிப்பிட்ட வீரரருக்கு தெரியும் என்பதால். எனவே, நீங்கள் இப்போது எனக்கு நல்ல விலைக்கு வாங்குங்கள், இல்லையென்றால் அடுத்த வருடம் நான் அதிக விலைக்கு செல்வேன் என்பதே அவரது கருத்தாக இருந்தது. மேலும் சிஎஸ்கே அவருக்கு பணம் கொடுக்கத் தயாராக இருந்தது, அதனால்தான் அவர் வந்தார். பின் பாதியில், சிஎஸ்கே அணி நன்றாக இருந்தது. ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் அவர்கள் ரூ.30 கோடியுடன் செல்வார்கள்," என்று அஸ்வின் மேலும் கூறினார்.

சிஎஸ்கே விளக்கம்:

அஸ்வினின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிக்கை வெளியிட்டுள்ளது, சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் போது மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்யும் போது அணி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ஐபிஎல் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கின என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது,"

"ஏப்ரல் 2025 இல், காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸ் 2.2 கோடி ரூபாய் லீக் கட்டணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், அவர் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாதி ஏஐ ஜோஹர் அரங்கில் நடைபெற்ற ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்தில் 2.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்

"ஐபிஎல் வீரர்கள் விதிமுறைகள் 2025-27 இன் படி, குறிப்பாக 'மாற்று வீரர்கள்' என்பதன் கீழ் பிரிவு 6.6 இன் படி டெவால்ட் பிரெவிஸ் முழுமையாக கையெழுத்திட்டார்," என்று அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.