இந்தியன் பிரீமியர் லீக் 2023 அடுத்த ஆண்டில் நிகழ இருக்கிறது. இந்த சீரிஸில் தனது ’ப்ளீட் யெல்லோ’ அணிக்கு கேப்டனாக தோனி இருப்பாரா? இல்லையா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி உண்மையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியை வழிநடத்தப் போகிறார் என்று சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளார். இது உலகின் பணக்கார கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16வது சீரிஸ் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது..
“எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் வரும் என்று நாங்கள் கூறவே இல்லை. ஐபிஎல் 2023க்கும் தோனியே கேப்டனாக நீடிப்பார்” என்று சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
2022ம் ஆண்டில், ரவீந்திர ஜடேஜா ஒரு மோசமான ரன் ஸ்கோருக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அந்த தொடரில் அவர் வழிநடத்திய எட்டு போட்டிகளில் சிஎஸ்கே ஆறில் தோல்வியடைந்தது. அவரது தனிப்பட்ட ஆட்ட வடிவமும் அவரது திறனுக்கு கைக்கொடுக்கவில்லை. ஜடேஜா 10 ஆட்டங்களில் 20 சராசரியில் 116 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் 7.51 என்ற எகானமி விகிதத்தில் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
பிளேஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத சென்னை அணிக்கு இது மறக்கடிக்க வேண்டிய சீசன். சீசனின் கடைசி போட்டியில் தோனி 2023ல் அணியை வழிநடத்துவார் என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார், ஆனால் இப்போது ஜடேஜா சென்னை அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் சரியாக என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.