ஐபிஎலில் பஞ்சாப் அணி அனுபவம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் “யூனிவர்ஸ் பாஸ்” என அன்போடு அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 2018 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கெயில், அந்நேரத்தில் 41 போட்டிகளில் கலந்து 1304 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும், 11 அரை சதங்களும் அடங்கும்.
மரியாதை இல்லாமல் நடத்தப்பட்டேன்
சமீபத்தில் அளித்த பேட்டியில், கெயில் கூறியதாவது:
vநான் ஐபிஎல் தொடருக்கு மதிப்பை ஏற்படுத்தியவன். ஆனால் பஞ்சாப் அணி என்னை ஒரு சிறுவனைப் போல நடத்தினது. அந்த அணியுடன் இருந்த அனுபவம் என்னை உண்மையிலேயே பாதித்தது,” என அவர் வருத்தப்பட்டார்.
மன அழுத்தம் வரை சென்ற நிலை
மேலும் கெயில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபோது, “எனது வாழ்க்கையில் முதல்முறையாக மன அழுத்தத்தை அனுபவித்தேன். அப்போது நான் மிகவும் உடைந்து போனேன். பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் பேசியபோது கூட அழுதுவிட்டேன்,” என பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் வைரல்
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பற்றிய கிறிஸ் கெயிலின் இந்த அதிருப்தி நிறைந்த கருத்துகள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, “யூனிவர்ஸ் பாஸ்” என ரசிகர்கள் அன்பு செலுத்தும் கெயில், இப்படி மன அழுத்தம் அனுபவித்ததாக சொன்னது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கெயிலின் ஐபிஎல் பயணம்
கிறிஸ் கெயில் தனது ஐபிஎல் கேரியரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடங்கி, பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அங்கு தன் நிலைக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.