சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டிரேடிங் செய்யப்பட்ட சஞ்சு சாம்சனை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026:
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான வீரர்களின் தக்க வைப்பு பட்டியலை எல்லா ஐபிஎல் அணிகளும் சமர்பித்து இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, ராஜாஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ஆகியோர் கொடுத்து அணியில் சேர்த்தனர்.
சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ராஜஸ்தான் அணிக்கு ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் சிஎஸ்கே சார்பில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் தொடருக்காக 18 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்ட ஜடேஜாவிற்கு, ராஜஸ்தான் அணியில் தற்போது 14 கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட அதே 18 கோடி ரூபாய் ஊதியத்தை சஞ்சு சாம்சனுக்கு வழங்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாம். சென்னை அணியால் வீரர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஆகும்.
சாம்சனுக்கு வீடியோ:
சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டதை ஏஐ வீடியோவில் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். மறுப்பக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜடேஜாவுக்கு தரமான வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
ஆனால் சென்னை அணி மட்டும் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்கான பதிவுகளை மட்டும் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி சாம்சனுக்காக புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் மலையாள இயக்குனரும் நடிகருமான பேசில் ஜோசப், “இனி நம்ம பையன் yelllow, கூடவே நாங்களும் இருக்கோம். சிஎஸ்கேவுக்கு கேரளாவின் சப்போர்ட் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்
ஐபிஎல்லில் சாம்சன்:
சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 4500 ரன்களுக்கு மேல் அடித்த அனுபவம் வாய்ந்த வீரராவார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐபிஎல்லில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சாம்சன் ஐந்து ஐபிஎல் சீசன்களில் (2021 முதல் 2025 வரை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில், ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியில் அவர் இடம்பெற உள்ள நான்காவது அணி சிஎஸ்கே ஆகும்.