IPL 2025 Updated Schedule: ஐபிஎல் 2025 போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பிசிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 மீண்டும் தொடக்கம்:
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தணிந்ததை அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 3ம் தேதி நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் 6 மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. பிளே-ஆஃப் சுற்றானது மே 29ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்து வரப்போகும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தலா இரண்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக கைவிடப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி இடையேயான போட்டி மீண்டும் நடத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 அணிகள் பலப்பரீட்சை:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. இருப்பினும், மீதமுள்ள 7 அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்காக கடுமையாக மோதி வருகின்றன. லக்னோ மற்றும் நடப்பு சாம்பியனான கொல்கட்தா ஆகிய அணிகள் நூலிழையில் தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளன. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முதல் மூன்று இடங்களில் ஆதிக்கம் செலுத்த, மும்பை மற்றும் டெல்லி அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஆனால், எந்தவொரு அணியும் இதுவரை தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025 - திருத்தப்பட்ட அட்டவணை:
| தேதி/ நேரம் | போட்டி | மைதானம் |
| மே.17 - இரவு 7.30 | பெங்களூரு - கொல்கத்தா | சின்னசாமி மைதானம் |
| மே.18 - மாலை 3.30 | ராஜஸ்தான் - பஞ்சாப் | சவாய் மான்சிங் மைதானம் |
| மே.18 - இரவு 7.30 | டெல்லி - குஜராத் | அருண் ஜெட்லி மைதானம் |
| மே.19 - இரவு 7.30 | லக்னோ- ஐதராபாத் | ஏக்னா கிரிக்கெட் மைதானம் |
| மே.20 - இரவு 7.30 | சென்னை - ராஜஸ்தான் | அருண் ஜெட்லி |
| மே.21 - இரவு 7.30 | மும்பை - டெல்லி | வான்கடே மைதானம் |
| மே.22 - இரவு 7.30 | குஜராத் - லக்னோ | அகமதாபாத் மைதானம் |
| மே.23 - இரவு 7.30 | பெங்களூரு - ஐதராபாத் | சின்னசாமி மைதானம் |
| மே.25 - மாலை 3.30 | குஜராத் - சென்னை | அகமதாபாத் மைதானம் |
| மே.25 - இரவு 7.30 | ஐதராபாத் - கொல்கத்தா | அருண் ஜெட்லி |
| மே.26 - இரவு 7.30 | பஞ்சாப் - மும்பை | சவாய் மான்சிங் மைதானம் |
| மே.27 - இரவு 7.30 | லக்னோ- பெங்களூரு | ஏக்னா கிரிக்கெட் மைதானம் |
| மே.29 - இரவு 7.30 | குவாலிஃபயர் - 1 | இறுதி செய்யப்படவில்லை |
| மே.30 - இரவு 7.30 | எலிமினேட்டர் | இறுதி செய்யப்படவில்லை |
| ஜுன்.1 - இரவு 7.30 | குவாலிஃபயர் - 1 | இறுதி செய்யப்படவில்லை |
| ஜுன்.3 - இரவு 7.30 | இறுதிப்போட்டி | இறுதி செய்யப்படவில்லை |