மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 2023- ஆம் ஆண்டிலிருந்து 2027 ஆண்டு வரை வரையிலான 5 ஆண்டுகளுக்கு மகளிர் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமையை வாயாகம் 18 வாங்கியுள்ளது.
ஒரு ஐ.பி.எல். ஆட்டத்திற்கு ரூ.7.09. உரிம கட்டணம் என்ற விகிதத்தில் 5 ஆண்டுகள் ஒளிபரப்பு உரிமத்தை வையாகாம்- 18 நிறுவனம் வென்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
2023-2027 சுழற்சிக்கான பெண்கள் இந்தியன் பிரீமியர் லீக் (WIPL) ஊடக உரிமைக்கான ஏலம் இன்று காலை நடைபெற்றது. இதில் பெண்கள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஊடக உரிமை மதிப்பை ரூ.951 கோடிக்கு Viacom18 வென்றுள்ளது.
மேலும், ஐந்து WIPL உரிமையாளர்களை ஜனவரி 25ம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட இருக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் @IPL ஊடக உரிமைகளை வென்றதற்கு @viacom18 வாழ்த்துக்கள். @BCCI மற்றும் @BCCIWomen மீது உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. Viacom அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2023-27) ஒரு போட்டியின் மதிப்பான INR 7.09 கோடிகள் அதாவது 951 கோடிகளை வழங்கியுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரியது" என்று பதிவிட்டு இருந்தார்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 951 கோடி ரூபாயும், ஒவ்வொரு போட்டிக்கும் 7.09 கோடி ரூபாயும் வழங்குவதாக வயாகாம் உறுதியளித்துள்ளது.
முதல் சீசனின் தொடக்க ஆட்டம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இருப்பினும், போட்டி அட்டவணையை வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அன் கேப்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டு மாற்று வழிகள் வழங்கப்பட்டுள்ளன, ஏற்கனவே பெண்கள் ஐபிஎல் தொடரில் அறிமுகமான வீரர்கள், இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம், ரூ. 20 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.