1) பால் எங்கே சென்றது ?
ஐபிஎல் 2019 தொடரில் பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டைம் அவுட் நேரம் முடிந்தபின் போட்டியை தொடங்கலாம் என பார்த்தால் பந்தை மைதானத்தில் காணவில்லை. அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் பந்து எங்கே போனது என்று, வழக்கமாக சிக்சர் அடித்து பந்துகள் தொலைவதும், மைதானத்திற்கு வெளியே செல்வதும் பாத்திருப்போம், ஆனால் இந்த முறை பந்து எங்கே இருந்தது என்ற வேடிக்கையை நீங்களே பார்த்து ரசியுங்கள்...
வீரர்கள் முதல் நடுவர் வரை அனைவரும் பந்து எங்கே போனது என்று தலையை போட்டு பிய்த்துக்கொள்ள, இறுதியில் மூன்றாவது நடுவர் தான் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தார். பந்து நடுவரின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடியது ரசிகர்கள் மத்தியில் வேடிக்கையாக இருந்தது.
2) மங்கூஸ் பேட்
வழக்கமான கிரிக்கெட் பேட்டை பார்த்திருப்பீர்கள், ஆனால் 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர் மாத்யு ஹேடன் ஒரு புது விதமான பேட்டுடன் களத்திற்கு வந்தார், அது தான் ‘மங்கூஸ் பேட்’. மங்கூஸ் பேட்டுடன் களமிறங்கிய ஹேடன் 43 பந்துகளில் 93 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருது படைத்தார்.
அது குறித்து பின்னர் பேசிய ஹேடன் "தயவுசெய்து இந்த பேட் பயன்படுத்த வேண்டாம், வாழ்க்கையில் நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்!" என்று தோனி தன்னிடம் சொன்னதாக தெரிவித்தார்.
3) ஒரே பால் - இரண்டு அவுட்
கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அவுட் ஆகுறது சகஜம்தான், ஆனால் ஒரே பந்தில் இரண்டு வித்தியாசமான முறையில் அவுட் ஆகி பார்த்து இருக்கீங்களா ? 2020 ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் இரண்டு வெவ்வேறு வழிகளில் ஆட்டமிழந்தார் "முதலில் ஒரு பெரிய ஹிட் அடிக்க முயன்ற ரஷீத், தீபக் சாஹரால் கேட்ச் ஆனார், அதே நேரம் தற்செயலாக ஸ்டம்பில் கால் வைத்து பெயில்ஸ் தட்டி விட்டார்.
4) நடுவர்களுக்கு ஆப்பிள் கொடுக்கப்பட்ட மொமெண்ட்
வழக்கமாக போட்டி துவங்கும் முன் மைதானம் உள்ளே நடுவர்கள் வரும்போது, அவர்களிடம் பால் வழங்கப்படும். ஆனால் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொல்கத்தா, புனே அணிகள் இடையேயான போட்டிக்கு முன் பந்திற்கு பதிலாக கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் வழங்கப்பட்டன.
5) மாஸ்க் போடுறது பழைய ஸ்டைல் - வாயில் டேப் போடுறது கைரன் பொல்லார்ட் ஸ்டைல்
2015-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது களத்திற்கு உள்ளே வந்த கைரன் பொல்லார்ட்டை தொடர்ந்து சக மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான கிறிஸ் கையில் இடம் தொடர்ந்து வம்பு பேச்சில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். அதை கண்ட நடுவர்கள் பேச்சை குறைத்துக்கொள்ளுமாறு கைரன் பொல்லார்ட்டை எச்சரித்தனர், உடனே தனது பாணியில் ரிப்ளை செய்த பொல்லார்ட் வாயில் டேப் ஒட்டிக்கொண்டு போட்டியில் பங்கேற்றார். ஐபிஎல் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வாக இது அமைந்தது.
6) என்னையா துரத்துற? - ஸ்பைடர் கேம் துரத்திய கிறிஸ் கைல்
ஐபிஎல் தொடரின் போட்டியின் நடுவே மைதானத்தில் ஸ்பைடர் கேம் என்பது வானில் படம்பிடித்துக்கொண்டு, அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும். கிறிஸ் கைல் களத்தில் இருந்தாலே எப்போதும் என்டெர்டைன்மெண்ட் தான், அவர் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் திடீரென நகர்ந்து கொண்டிருக்கும் ஸ்பைடர் கேம் துரத்திப்பிடிக்க முயற்சி செய்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.