ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் சீசன் 2008ம் ஆண்டு நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.




ஐ.பி.எல். தொடரின் 2வது சீசன் 2009 மக்களவை தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் பெங்களூருவை வீழ்த்தி டெக்கான் சார்ஜஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.


2010, 2011 என இரு  ஐ.பி.எல். கோப்பைகளையும் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர்ச்சியாக தட்டிச்சென்றது.




2012ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்றது.


2013ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.


2014ம் ஆண்டு ஐ.பி.எல்.தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா 2வது முறையாக கோப்பையை வென்றது. 


2015 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


சூதாட்ட புகாரில் சிக்கியதால் சென்னை, ராஜஸ்தான் அணிக்கு 2016, 2017ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் 2016ம் ஆண்டு ஐதராபாத் அணியும், 2017ம் ஆண்டு மும்பை அணியும் கோப்பையை வென்றது.




2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல்.தொடரில் களமிறங்கிய சென்னை அணி சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக வென்று அசத்தியது.


2019ம் ஆண்டு ஐ.பி.எல்.தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்றது.


கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக ஐ.பி.எல். போட்டி 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.