ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தநிலையில், இந்த போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்க்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். மேலும், காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தசூழலில், வருகின்ற 26 ம் தேதி இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 10 அணிகள் பங்கேற்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டு முதல் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடம் பெற்றுள்ளது. இதற்கான ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்தது. 


இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 




முன்னதாக, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பயோ பபுள் விதியால் ஏற்பட்ட சோர்வால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல், குஜராத் அணியில் இருந்து ஜேசன் ராய் விலகினார். 


தற்போது, ஐபிஎல் தொடரில் இருந்து மார்க் வுட்டும் விலக இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






இதுகுறித்து, கிரிக்கெட் விமர்சகர் அசோக் சோப்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பயோ- பபிள் பிரச்சினைகளை மேற்கோள்காட்டி ஐபிஎல்லில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுகின்றனர். தாங்கள் எதற்காக பதிவு செய்கிறோம் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு, ஐபிஎல் தொடரில் பதிவு செய்யலாம். தங்களைக் கிடைத்த வாய்ப்புக்கு பிறகு, இப்படி செய்வதால் எதிர்காலத்தில் ஐபிஎல் அணிகள் மீண்டும் அணியில் எடுக்க யோசிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண