ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 16-ஆவது ஐ.பி.எல், ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். ஜோஸ் பட்லர் 8 ரன்களுக்கும், மனன் வோரா 7 ரன்களுக்கும், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்ததால், தொடக்கமே ராஜஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து, இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே இணை நிதானமாக ஆடியது. 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து 46 ரன்களை சேர்த்திருந்த ஷிவம் துபேவும் ஆட்டமிழக்க, களத்தில் இறங்கிய ராகுல் திவேதியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இறுதியில் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, படிக்கல் ஆகியோரின் அதிரடியால் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 72, படிக்கல் 101 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் போட்டியில் முதல் சதமடித்த படிக்கல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றது.

Milestone 🔓

6000 Runs in #VIVOIPL for 👑 Kohli 👏👏

Live - https://t.co/dch5R4juzp #RCBvRR #VIVOIPL pic.twitter.com/WxLODwE2zD
— IndianPremierLeague (@IPL) April 22, 2021

இந்தப் போட்டியின் 13ஆவது ஓவரில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்தபோது, ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 196ஆவது போட்டியில் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கே வீரர் ரெய்னா 5,448 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெல்லி வீரர் ஷிகர் தவான் 5,428 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் வீரர் வார்னார் 5,384 ரன்களுடன் நான்காவது இடத்திலும், 5,368 ரன்களுடன் ஐந்தாம் இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மாவும் உள்ளனர்.