கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சென்னை அணிக்கு ஓப்பனிங் இறங்கும் டூபிளசிஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதே போல, கொரோனா பரவல் அபாயம் காரணமாகவும், உலகக்கோப்பை டி-20 தொடரில் பங்கேற்க இருப்பதாலும் வேறு சில வீரர்களும் ஐபிஎல் இரண்டாம் பாதி போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். 


தொடரில் இருந்து விலகி இருக்கும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் அறிவித்து வரும் நிலையில், யார் உள்ளே, யார் வெளியே என்பதன் லிஸ்ட் இங்கே!


ராயல் சாலஞ்சர்ஸ்


உள்ளே - வனிந்து ஹசரங்கா ; வெளியே - ஆடம் ஜம்பா


உள்ளே - துஷ்மந்தா சமிரா ; வெளியே - டானியல் சாம்ஸ்


உள்ளே - ஜார்ஜ் கிராடன் ; வெளியே - கேன் ரிச்சார்ட்சன்


உள்ளே - டிம் டேவிட் ; வெளியே - ஃபில் ஆலன்


உள்ளே - ஆகாஷ் தீப் ; வெளியே - வாஷிங்டன் சுந்தர்






ராஜஸ்தான் ராயல்ஸ்


உள்ளே - க்ளென் ஃபிலிப்ஸ் ; வெளியே - ஜோஃப்ரா ஆர்ச்சர்


உள்ளே - தப்ரைஸ் ஷம்ஸி ; வெளியே - ஆண்ட்ரூ டை


உள்ளே - ஒஷேன் தாமஸ் ; வெளியே - பென் ஸ்டோக்ஸ்


உள்ளே - இவின் லூயிஸ் ; வெளியே - ஜோஸ் பட்லர்


பஞ்சாப் கிங்ஸ்


உள்ளே - நாதன் எல்லீஸ் ; வெளியே - ரைலி மெரிடித்


உள்ளே - அடில் ரஷ்த் ; வெளியே - ஜை ரிச்சார்ட்சன்


உள்ளே - ஐடென் மார்க்கரம் ; வெளியே - தாவித் மலான்






கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


உள்ளே - டிம் சவுதி ; வெளியே - பாட் கம்மின்ஸ்


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 


உள்ளே - ஷெர்ஃபோன் ரூதர்போர்டு ; வெளியே - ஜானி பேர்ஸ்டோ


டெல்லி கேப்பிடல்ஸ்


உள்ளே - பென் துவார்சூஸ் ; வெளியே - கிறிஸ் வோக்ஸ்


செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கும் இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், டாப் நான்கில் இடம் பிடிக்கப்போகும் அணிகள் யாவை என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.