KKR vs RCB LIVE: 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி ; படுதோல்வியோடு பெவிலியனில் பெங்களூரு

 ஐபிஎல் வரலாற்றில், இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா 15 முறையும், பெங்களூரு 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 20 Sep 2021 10:22 PM
அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் - ஐபிஎல் போட்டியில் 3000 ரன்கள் அடித்த கே.எல்.ராகுல்

சேத்தன் சக்காரியா பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட ராகுல், ஐபிஎல் போட்டியில் 3000 ரன்களை குவித்தார். 

முதல் பவுண்டரியை விளாசிய ராகுல்  

பஞ்சாப் அணி மூன்றாவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி  16  ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 8, மயங்க் அகர்வால் 7 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த ஓவரில் ராகுல்  முதல் பவுண்டரியை விளாசினார்.

இரண்டாவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி  9  ரன்கள்

பஞ்சாப் அணி இரண்டாவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி  9  ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 3, மயங்க் அகர்வால் 6 ரன்கள் எடுத்துள்ளனர்.

பஞ்சாப் அணி முதல் ஓவரின் முடிவில் 4 ரன்கள் எடுத்தது

இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வரும் பஞ்சாப் அணி முதல் ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. ராகுல் 2, மயங்க் அகர்வால் 2

ஐந்து ரன்களுக்கு வெளியேறினார் கோலி

பிரசித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரில், எல்பிடபிள்யூ ஆகி விராட் கோலி அவுட்டாகியுள்ளார். அம்பயர் முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்டது ஆர்சிபி. ஆனால், விக்கெட்ஸ் ஹிட்டாவதால், அவுட் கொடுக்கப்பட்டது.

Background

கொரோனா பரவலை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், மும்பையை தோற்கடித்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இன்று இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.


ஏற்கனவே, இந்த ஐபிஎல் சீசனின் முதல் சந்திப்பில், 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்று பெங்களூரு அணி போட்டியை கைப்பற்றியது. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா ஏழாவது இடத்தில் உள்ளது. இதனால், இனி வரும் போட்டிகள் கொல்கத்தா அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளதால், வெற்றியை ஈட்ட இரு அணிகளும் கடுமையாக போட்டியிடும். ஐபிஎல் வரலாற்றில், இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா 15 முறையும், பெங்களூரு 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 


இரு அணி வீரர்கள் பட்டியல்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயன் மார்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, சுபம் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ரஸல், சுனில் நரன், லாக்கி ஃபெர்குசன், நாகர்கோட்டி, வருண் சக்கிரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), படிக்கல், பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சபாஸ் அகமது, ஜேமிசன், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ், சாஹல்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.