2024- விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து பார்ப்போம். 


விளையாட்டு துறை விருதுகள்:


விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.  அர்ஜுனா விருது தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரருக்கு வழங்கப்படுகிறது. விளையாட்டு மேம்பாட்டில் வாழ்நாள் பங்களிப்புக்காக அர்ஜுனா விருது (வாழ்நாள்) அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது அளிக்கப்படுகிறது.




                     ஒலிம்பிக் போட்டியில் மேஜர் தயான் சந்த்


விண்ணப்பங்கள் வரவேற்பு:


நாட்டில் விளையாட்டு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய  (பொது / தனியார்), அரசு சாரா நிறுவனங்களுக்கு தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது வழங்கப்படுகிறது மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறனுக்காக மவுலானா அப்துல் கலாம் ஆசாத் கோப்பை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும்.


மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2024 -ம் ஆண்டிற்கான இந்த விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிப்புகள் www.yas.nic.in  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்கும் முறை:


விருதுகளுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரத்யேக இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் dbtyas-sports.gov.in   மட்டுமே சுயமாக விண்ணப்பிக்க வேண்டும். விருதுகளுக்கான தகுதியான விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்களின் விண்ணப்பங்களை 2024,  நவம்பர் 14 (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.


Also Read: உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பன்னுங்க..!- முதலமைச்சர் ஸ்டாலின் மோட்டிவேசன்