இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷ்யா சென்,சமீர் வர்மா மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் அகர்ஷி கஷ்யப் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் லக்‌ஷ்யா சென் ஹன்ஸ் சோல்பெர்கை  எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 21-10,21-18 என்ற கணக்கில் எளிதாக வென்றார். 


 


இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் லக்‌ஷ்யா சென் டென்மார்க் வீரர் ரஸ்மஸ் ஜெம்கேவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இறுதியில் 21-18 என்ற கணக்கில் முதல் கேமை லக்‌ஷ்யா சென் வென்றார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமின் தொடக்கத்தில் டென்மார்க் வீரர் அதிரடியாக தொடங்கினார்.


 






எனினும் இரண்டாவது கேமின் பிற்பாதியில் சிறப்பாக செயல்பட்ட லக்‌ஷ்யா சென் 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 21-18,21-15 என்ற கணக்கில் போட்டியை வென்றார். மேலும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்று அசத்தினார்.


முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  டென்மார்கின் கிறிஸ்டோபர்செனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதை 18-21, 21-15,21-11 என்ற கணக்கில் போராடி வென்றார். இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இவர் இந்தோனேஷியாவின் துன்ஜங்கை எதிர்த்து விளையாட உள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண