ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடக்க உள்ளது. இந்தியாவில் இருந்து ஆசிய போட்டிக்கு செல்வதர்கான தகுதி சுற்று போட்டி வருகின்ற 22,23 ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவுசெய்யபட்டது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்ரான பஜ்ரங் பூனியா (65 கிலோ), காமன் வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் (53 கிலோ) தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க தேவை இல்லை. அவர்கள் நேரடியாக ஆசிய மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைகால கமிட்டி அனுமதி அளித்தது. பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் ஆகிய இருவரும் ஒரு மாதகாலமாக சம்மேளன தலைவரை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடுப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு சலுகைகள் வழங்க கூடாது
ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள யாருக்கும் சிறப்பு சலுகை வழங்க கூடாது என்று சக மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால் , ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கபதக்கத்தை கைப்பற்றிய வீராங்கனையான அந்திம் பன் ஹால் சார்பில் கூட்டாக டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “எந்த ஒரு வீரருக்கும் ஆசிய சாம்பியன் போட்டிக்கு சிறப்பு சலுகை வழங்க கூடாது. தகுதி சுற்று போட்டி நியாயமான முறையில் அனைவருக்கும் நடக்க வேண்டும். தகுதி சுற்று போட்டிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தப்பட்டது
இதற்கிடையே, அந்திம் பன்ஹால் ,இளம் மல்யுத்தம் வீரர், வீராங்கனைகள், ‘இந்திய மல்யுத்த வீரர்கள் அனைவருக்கும் தகுதி போட்டி நடக்கவேண்டும். இருவருக்கும் மட்டும் விலக்கு அழிப்பது நியாயமற்றது என்று கூறி அரியானா மாநிலம் ஹிசார் நகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.