இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தடகள லெஜண்ட் உசைன் போல்ட்டை முந்தி உலகிலேயே அதிகம் எழுதப்பட்ட தடகள வீரராக பெருமை பெற்றுள்ளார். 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயங்களில் உலக சாதனை படைத்த ஜமைக்கா வீரர் இந்த பந்தயத்தில் முதல் முறையாக தோல்வியடைந்துள்ளார்.


நீரஜ் சோப்ரா முதலிடம்


AFP இன் அறிக்கையின்படி, இந்த ஆண்டு நீரஜ் சோப்ரா மொத்தம் 812 கட்டுரைகளுடன் உலக தடகளத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், டிராக் அண்ட் ஃபீல்ட் தடகள வீரராக முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஈட்டி எறிதல் வீரர் எலைன் தாம்சன் ஹெரா (751 கட்டுரைகள்), ஷெல்லி ஆன் ஃப்ரேசர் ப்ரைஸ் (698 கட்டுரைகள்) மற்றும் ஷெரிகா ஜாக்சன் (679 கட்டுரைகள்) ஆகிய தடகள வீரர்களும் உசேன் போல்டை பின்னுக்குத் தள்ளி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். உசைன் போல்ட் மொத்தம் 574 கட்டுரைகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் டயமண்ட் லீக் பட்டத்தை வென்ற நீரஜ் சோப்ரா இவ்வருடம் ஒரு அற்புதமான ஆண்டை அனுபவித்தார். அவர் இவ்வருடத்தில் 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்று, அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகளாவிய நிகழ்வில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார். 



உசேன் போல்ட் முன்னிலை பெறாத முதல் ஆண்டு


 "உசைன் போல்ட் தடகள வீரர்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்ட பட்டியலில் முன்னிலை வகிக்காதது இந்த ஆண்டுதான் முதல் ஆண்டு" என்று உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ மேற்கோள் காட்டினார். உலக தடகளம் ஊடக பகுப்பாய்வு நிறுவனமான யுனிசெப்டாவுக்கு இந்த தரவுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக்கிற்கான தடகள வெற்றியாளரான போல்ட், விளையாட்டை மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஓய்வு பெற்றதிலிருந்து அவர் பெற்ற ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் குறைக்கப்பட்டது என்று செபாஸ்டியன் கோ கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: TN Rain: தீவிரத்தை தக்கவைத்துள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டில் மழை எப்போ? எப்படி?


உசேன் போல்ட் ஓயவில்லை


"அந்த விளையாட்டு வீரர்களில் சிலர் ஏன் பட்டியலில் இருந்தனர் என்பது அதற்கு முந்தைய ஆண்டு தெளிவாகத் தெரிந்தது: காஸ்டர் செமென்யா, கிறிஸ்டின் எம்போமா, போன்றவர்களின் டெஸ்டோஸ்டிரோன் சர்ச்சை ஒரு முக்கிய காரணம். நீரஜ் டோக்கியோவில் (கடந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ்) பெரிய வேலைகளைச் செய்தார், மேலும் அவர் டயமண்ட் லீக் நிகழ்வுகளிலும் தன் இருப்பை காண்பித்தார். உசைன் போல்ட் ஓய்வு பெற்றிருந்தாலும் ஓய்ந்து போய்விடவில்லை, அவருடைய தோழர்களை நான் அறிவேன், மேலும் அவர் வணிக ரீதியாக மிகவும் பிஸியாக இருக்கிறார். 



என்ன காரணம்?


"இந்த வருடம் களத்தில் உள்ள தடகள வீரர்கள் படு பிசியாக இருந்தது ஒரு காரணம். நாம் காமன்வெல்த் விளையாட்டுகள் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளையும் மறந்துவிடக் கூடாது, மேலும் அவர்கள் ஒரு முழு டயமண்ட் லீக் சீசனில் போட்டியிட்டனர், மேலும் பல கான்டினென்டல் டூர் நிகழ்வுகள் மற்றும் தேசிய தேர்வுகளில் போட்டியிட்டனர். என்னைப் பொறுத்தவரை இது அவர்களின் விளையாட்டின் உச்சியில் நிலைத்திருப்பதற்கான சூழல்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் முயற்சிகளின் மூலம் தடகளம் உண்மையில் மீண்டும் பிரபலமடையத் தொடங்கியுள்ளது மற்றும் அதிக ஒளிபரப்பு நேரத்தைப் பெற்றுள்ளது." என்று கூறினார்.