இந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அசத்தியது. முதல் பாதியில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால், மலேசிய அணியால் கோல் அடிக்க முடியாமல், எதிரணி கோல் அடிப்பதை தடுக்கவே முயற்சி மேற்கொண்டது.
இருப்பினும், போட்டியின் நான்கு பாதிகளிலும் இந்திய அணி கோல்களை பறக்கவிட்டது. இதன்மூலம், இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வென்று கலக்கியது.
அசத்திய இந்திய வீரர்கள்:
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோர் இந்திய அணிக்காக கோல்களை தெறிக்கவிட்டது. இந்திய அணிக்காக தமிழக வீரர் கார்த்தி செல்வம் முதல் கோலை 15வது நிமிடத்தில் அடைத்தார். தொடர்ந்து, ஹர்திக் சிங் இந்திய அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். இந்த கோலானது 32வது நிமிடத்தில் இந்த கோல் பதிவானது. அதே நேரத்தில் இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மூன்றாவது கோலை 42வது நிமிடத்தில் அடித்தார்.
அடுத்தடுத்து, குர்ஜந்த் சிங் இந்திய அணிக்காக 53 வது நிமிடத்தில் நான்காவது கோலையும், ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங் ஐந்தாவது கோலை அடித்தார். இதனால் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு அரையிறுதிக்கான பாதை எளிதாகிவிட்டது.
மற்றொரு போட்டி:
இந்தியா- மலேசியா அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு முன்னதாக, நேற்று மாலை 4 மணிக்கு 7வது போட்டியில் தென் கொரியா - சீனா அணிகள் மோதியது.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று ஆடியது. இதனால் ஆட்டம் சூடுபிடித்தது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும், கோல்கள் அடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இரு அணிகளும் தலா ஒரு கோல்களை பதிவுசெய்ய, ஆட்டநேர முடிவில் 1-1 என போட்டி டிரா ஆனது.
பாகிஸ்தான் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் 3-3 என டிரா ஆனது.