73 ஆண்டு கால வரலாற்றில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
பிரதமர் மோடி பாராட்டு :
சரித்திரம் படைத்த இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது! எங்கள் திறமையான குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்