வங்கதேசத்துக்கு எதிராக (நாளை) வியாழக்கிழமை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேட்டேஷ்வர் புஜாரா மிகப்பெரிய சாதனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இந்த டெஸ்டில் புஜாரா 13 ரன்கள் மட்டுமே எடுத்தால், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சர் டான் பிராட்மேனின் டெஸ்ட் ரன்களின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சர் டான் பிராட்மேன் தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 6996 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய வீரர் புஜாரா இதுவரை 6984 ரன்கள் எடுத்துள்ளார். புஜாரா 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44.76 சராசரியுடன் 6984 ரன்கள் குவித்துள்ளார். 12 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில், 19 சதங்கள் அடித்துள்ளார்.


19வது சதம்: 


சிட்டகாங்கில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சேட்டேஷ்வர் புஜாரா தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம், ராஸ் டெய்லர் (நியூசிலாந்து), கோர்டன் கிரீனிட்ஜ் (மேற்கிந்திய தீவுகள்), கிளைவ் லாயிட் (மேற்கிந்திய தீவுகள்) மற்றும் மைக் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் 19 டெஸ்ட் சதங்களின் சாதனையை சமன் செய்தார். கடந்த டெஸ்டில் இந்த நான்கு ஜாம்பவான்களை முந்திச் செல்லும் வாய்ப்பும் புஜாராவுக்கு கிடைத்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், புஜாரா 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் 130 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இது இவரது அதிவேக சதமாகும். 


அதிக டெஸ்ட் ரன்களை அடித்த எட்டாவது இந்திய பேட்ஸ்மேன்: 


இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் புஜாரா 8வது இடத்தில் இருக்கிறார். 



  • முதல் இடம் - சச்சின் டெண்டுல்கர் (15,921)

  • இரண்டாம் இடம் - டிராவிட் (13,265)

  • மூன்றாம் இடம் - கவாஸ்கர் (10,122)

  • நான்காம் இடம் - லக்ஷ்மனன் (8,781)

  • 5ம் இடம் - சேவாக் (8,503)

  • 6ம் இடம் - விராட் கோலி (80,94)

  • 7வது இடம் - கங்குலி (7,212)

  • 8வது இடம் - புஜாரா (6,984)


100வது டெஸ்ட்:


இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட புஜாராவுக்கு இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் தேவையாக உள்ளது. அவர் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 13 வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். 


பார்ம் அவுட் டூ பார்ம் இன்:


பார்ம் அவுட் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் இருந்து அவரது ஆட்டம் வேறு மாதிரியாக அமைந்தது. 


ஓரே ஆண்டியில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் 1,094 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில்  விளையாடி அரைசதம் அடித்தார். கடைசியாக, புஜாரா ஜனவரி 2019 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 193 ரன்கள் அடித்திருந்தார். அதன்பிறகு நீண்டலாக சத வறட்சிக்கு முற்றுப்புள்ளியை நேற்று வைத்தார். 


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சதத்திற்கு பிறகு, இதுவரை புஜாரா 51 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். ஒரு சதம் கூட்ட அடிக்கவில்லை என்றாலும், இந்த இடைப்பட்ட நேரத்தில் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். 


அதேபோல், புஜாரா இந்த 51 இன்னிங்ஸில் விளையாடி, 90 ரன்களுக்கு மேல் இரண்டு முறையும், 80 ரன்களுக்கு மேல் ஒரு முறையும், 70 ரன்களுக்கு மேல் இரண்டு முறையும் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.