தமிழ்நாடு அலைச் சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது.

 

சர்வதேச அலைச் சறுக்கு போட்டி ( tamilnadu international surf open )

 

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச் சறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.

 



 

இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலாரும் முந்திக்கொண்டு தங்கள் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர் . தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.

 



 

நான்காவது நாளான நேற்று

 

இதில் 4வது நாளான நேற்று  பெண்கள் அணியினர் களம் இறங்கி சாகசம் செய்தனர். அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது. அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர். இறுதிச்சுற்றுக்கான தகுதியையும் பெற்றுள்ளனர். மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்று இருந்த,  தமிழக வீர் சிவராஜ் பாபு,  அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

போட்டி போடும் வீரர்கள்

 

இப்போட்டிகள் நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது இப்போட்டியை காண வசீகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலாளரும் போட்டி போட்டுக் கொண்டு அலையில் தங்கள் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.  இப்போட்டி வருகின்ற 20 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்று, பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இறுதி நாள் அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.