இந்திய  கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ் மேன் தினேஷ் கார்த்திக்கிடம் இருக்கும் திறமை உலகத் தரம் வாய்ந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி-20 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணி 2-2 என வெற்றி பெற்றிருந்தது. இறுதிப் போட்டி மிகவும் எதிர் பார்க்கப்பட்ட நிலையில், மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை. இதனால் தொடர் சமனில் முடிந்தது.


கார்த்திக், ஹர்த்திக்


இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தினேஷ் கார்த்திக்கைப் பற்றி தெரிவித்துள்ளார். இது  அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது, ’தினேஷ் கார்த்திக்கிடம் இருக்கும் திறமை உலகத் தரம் வாய்ந்தது. குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து அவரது விளையாட்டு முறை என்பது அனைவருக்கும் திருப்தி அளிக்கக் கூடியதாக  இருக்கிறது. கடைசி ஐந்து ஓவர்களில் அவர் அணியின் ஸ்கோரை மிக விரைவாக உயர்த்திவிடுகிறார்.  ராஜ்கோட் போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்கள் விளாசியிருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இவர்து பங்களிப்பு மிக முக்கிய காரணம். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஆவரேஜ் ஸ்கோர் என்பது ஐ.பி.எல்.லிருந்து தொடர்ந்து சீராக உள்ளது. இதேபோல் ஹர்த்திக் பாண்டியாவிடமும் இதே திறமை இருக்கிறது. இவர்கள் இருவரும் கடைசி ஐந்து முதல் ஆறு ஓவர்களில் களத்தில் இருந்தால் போட்டியின் தன்மையை முற்றிலுமாக மாற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த ஆற்றல் பெற்றவர்கள்’.  


இடதுகை பேட்ஸ் மேன்களின் பங்களிப்பு


அதேபோல், நமது பலம் நமக்கு தெரியும். நமது அணியில் இடது கை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு என்பது மிடில் ஓவர்களில் பெரிதும் தேவைப்படுகிறது. இந்த விசயத்தில் நாம் அதிக கவனம் செலுத்தி அணியின் இன்னும் பலம் வாந்த அணியாக மாற்ற வேண்டும் எனவும் டிராவிட் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணி நிர்வாகம் டி-20உலககோப்பைக்கான வீரர்க்ளை தேர்வு செய்வதில் முனைப்புடன் இருக்கும் நிலையில், வீரர்களின் செயல்பாடு மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றூம் ஹர்த்திக் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்திருப்பது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண