IND vs SL, 2nd ODI LIVE: இரு முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, இலக்கை எட்டுமா?

இந்தியா-இலங்கை அணிகம் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ABP NADU Last Updated: 20 Jul 2021 07:56 PM
ஓரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை: 14வது ஓவரில் 78/2 ரன்கள்!

இந்தியா-இலங்கை அணிகம் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் துவங்கிய நிலையில் அவிஸ்கா பெர்னாண்டோ, மினட் பனுகா ஜோடி துவக்க வீரர்களாக களம் இறங்கியது. 13 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில்,ஒரு விக்கெட் கூட இந்திய பவுலர்கள் எடுக்க முடியாமல் திணறினர். அதே நேரத்தில் இந்திய பந்து வீச்சை இலங்கை துவக்க வீரர்கள் எளிதில் அணுகினர். இந்த நிலையில் ஆட்டத்தில் 14வது ஓவரை வீசிய ஜகால், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மினட் பனுகா 42 பந்துக்கு 36 ரன்களும், பனுகா ராஜபக்சே முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நான்காவது வீரராக தனஞ்செய டிசில்வா இறங்கியுள்ளார். ஜகால் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Background

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 


ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் களமிறங்கிய இந்திய அணி கடந்த 18-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 263 ரன்களை 36.4 ஓவர்களில்  எட்டியது. இந்த போட்டியில் பிரித்விஷா, இஷான் கிஷான் அதிரடியுடன் ஷிகர்தவானின் நிதான ஆட்டமும் இந்திய அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது.


இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, இஷான் கிஷான் ஆகியோர் இந்த போட்டியிலும் தங்களது அதிரடியைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே, இந்தப் போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியில் இசுரு உடனா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கசுன் ரஜிதா சேர்க்கப்பட்டுள்ளார்.



இந்திய அணி விவரம்:



ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ப்ரித்வி ஷா, இஷான் கிஷான், மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இலங்கை அணி விவரம்:


தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்சே, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா,வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்‌ஷன் சந்தகன், கசுன் ரஜிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.