இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இந்திய அணி வெற்றி பெற 276 ரன்கள் தேவை.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கிய போட்டியில்,டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கையின் அவிஸ்கா பெர்னாண்டோ, மினட் பனுகா ஜோடி துவக்க வீரர்களாக களம் இறங்கினர். 13 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில்,ஒரு விக்கெட் கூட இந்திய பவுலர்கள் எடுக்க முடியாமல் திணறினர். அதே நேரத்தில் இந்திய பந்து வீச்சை இலங்கை துவக்க வீரர்கள் எளிதில் அணுகினர். இந்த நிலையில் ஆட்டத்தில் 14வது ஓவரை வீசிய சஹால், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், சஹாலுக்கு ஹாட்-ட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஹாட்-ட்ரிக் பந்து டாட் பந்து ஆனதால், ஹாட்-ட்ரிக் எடுக்கும் வாய்ப்பை சஹால் தவறவிட்டார். மினட் பனுகா 42 பந்துக்கு 36 ரன்களும், பனுகா ராஜபக்சே முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து, அவிஷா ஃபர்ண்டாண்டோ மட்டும் சிறப்பாக ஆட, அரை சதம் கடந்தபோது ஆட்டமிழந்தார். மற்றொரு பேட்ஸ்மேனான சரித் அஸ்லாங்காவின் பொறுப்பான ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 6 பவுண்டரிகள் விளாசிய அவர், 65 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சமிகா கருணரத்னே 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி விவரம்:
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ப்ரித்வி ஷா, இஷான் கிஷான், மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம்:
தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்சே, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா,வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன், கசுன் ரஜிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.