இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக இந்திய கேப்டன் கேஎல் ராகுல் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் காயம் காரணமாக இந்திய கேப்டன் கேஎல் ராகுல் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அணியை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இஷான் கிஷானுடன், ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வலது இடுப்பு காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் கே.எல் ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 ஐ தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய குல்தீப் யாதவ் நேற்று மாலை நெட்ஸில் பேட்டிங் செய்யும்போது வலது கையில் அடிபட்டதால் அவரும் 5 போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் இருந்து விலக இருக்கிறார்.
முன்னதாக, இந்திய அணியின் நியமிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அனுபவ வீரர்களான கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்