Ind vs Ger Men's Hockey Live Update: ஒரு கோல் வித்தியாசத்தில் வெண்கலம் வென்றது இந்தியா: 4 கோல் அடித்து போராடி தோற்ற ஜெர்மன்!

யாருக்கு வெண்கலம் என்கிற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா-ஜெர்மன் அணிகள் மோதி வருகின்றன. அந்த போட்டியின் அடுத்தடுத்த அப்டேட் இதோ...

Advertisement

ABP NADU Last Updated: 05 Aug 2021 08:59 AM

Background

41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்தியா ஆடவர் ஹாக்கி அணிக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு. வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மன் அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. துவக்கத்தி்ல் ஜெர்மன் ஒரு கோல் அடித்து முன்னிலையில் உள்ளது. ...More

ஒரு கோல் வித்தியாசத்தில் வெண்கலம் வென்றது இந்தியா: 4 கோல் அடித்து போராடி தோற்ற ஜெர்மன்!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் யாருக்கு என்பதற்கான போட்டி சற்று முன் நடைபெற்றது. இந்தியா-ஜெர்மன் அணிகள் மோதிய அப்போட்டியில் துவக்கத்தில் ஜெர்மன் 3 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், சுதாரித்து ஆடிய இந்திய வீரர்கள், அடுத்தடுத்து கோல் மழைபொழிந்தனர். இறுதியில் 5 கோல்களை இந்தியா அடிக்க, போராடிய ஜெர்மன் 4 கோல்கள் அடித்தது. இறுதியாக ஒரு கோல் அதிகம் பெற்ற இந்திய அணி வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று அசத்தியது. 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.