சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். 490 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23,000 ரன்களை கடந்த வீரரானார். சச்சினை பொருத்தவரை, 522 இன்னிங்ஸில் 23,000 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில், 70 சதங்கள், 110 அரை சதங்களை அடித்திருக்கிறார் கோலி. அவரது பேட்டிங் சராசரி 55-க்கும் மேல் உள்ளது. 

அதிவேகமாக 23,000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்

பேட்ஸ்மேன் இன்னிங்ஸ்
விராட் கோலி 490*
சச்சின் டெண்டுல்கர் 522
ரிக்கி பாண்டிங் 544
காலிஸ் 551
சங்ககரா 568
ராகுல் டிராவிட்  576
ஜெயவர்தனே 645

34,357 ரன்களோடு சச்சின் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரன்கள் குவித்து வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முன்னேறி கொண்டிருக்கிறார் விராட் கோலி.

இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.  இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பெளலிங் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய ரோஹித், ராகுல் ஆகியோர் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாராவும் குறைந்த ரன்களுக்கு அவுட்டாகினார். இதனால், கேப்டன் கோலியும், ஜடேஜாவும் பேட்டிங் செய்து வருகின்றனர். 

வெளிநாடுகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய டெஸ்ட் கேப்டன்சி ரெக்கார்டு

கோலி - 10* - இங்கிலாந்து

தோனி - 9 - இங்கிலாந்து

சுனில் கவாஸ்கர் - 8 - பாகிஸ்தான்

கோலி - 7 ஆஸ்திரேலியா

இதில், ஓவலில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டி கோலி தலைமையில் இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் 10-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம், வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளுக்கு இந்திய அணியை வழிநடத்திய கேப்டனானார் கோலி. தோனி, கவாஸ்கர் ஆகியோரின் எண்ணிக்கை முறியடித்துள்ளார்.