இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 400 ரன்களுக்கு மேல் எடுத்து விளையாடி வருகிறது. 300 ரன்களுக்கு மேல் லீடிங்கில் உள்ளது.

Continues below advertisement


லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்.  இருவரும் நன்றாக ஆடி வந்த நிலையில், ஜடேஜா 17 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த, ரஹேனா டக் ஆவுட் ஆன நிலையில், அடுத்து பண்ட் களமிறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய வந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. 230 ரன்கள் லீடிங்கில் இருந்தது.


இதனைத் தொடர்ந்து, ஷர்துல் தாக்கூர், ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினர். இதில் தாக்கூர் அதிரடி அதிரடியாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு  100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. தாக்கூர் சென்ற சிறிது நேரத்தில்  பண்ட் தனது 7ஆவது அரைசதம் அடித்தார். அதன்பிறகு அவரும் பெவிலியன் திரும்பினார். மொயில் அலி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


தற்போது 8 விக்கெட் இழப்புக்கு 414  ரன்கள் எடுத்து விளையாடி வரும் இந்திய அணி 315 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.