17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்திலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. கராச்சியில் 3 வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதன்மூலம், 68 கால பாகிஸ்தான் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றது. 


இந்தநிலையில், இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி வரலாறு காணாத தோல்வியை கண்டது குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணியை பங்கமாக கலாய்த்துள்ளது. அதில், “நாங்கள் மகிழ்ச்சியாக பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து 3-0 என்ற கணக்கில் தோற்க தயாராக உள்ளோம். சமநிலையின் நலனுக்காக இதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். மேலும், நாங்கள் ஒரு ஓவருக்கு 7 என்ற ரன்ரேட்டில் விளையாடாமல், 0.7என்ற ரன்ரேட்டில் தான் விளையாடுவோம்” என பதிவிட்டிருந்தனர். 


இதற்கு காரணம், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 216 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 


தொடர்ந்து, இங்கிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் ஜாக் க்ராவ்லி களமிறங்கினர். சற்று எளிய இலக்கு என்பதால் 3ம் நாளான நேற்று இருவரும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இருவரும் இணைந்து 11 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தனர். 


சாதனை வெற்றி:


கராச்சியில் தற்போது 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார்.  இங்கிலாந்து அணி 81.4 ஓவர்கள் முடிவில் 354 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 


50 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான ஷாபிக் 26 ரன்களும், ஷான் மசூத் 24 ரன்களில் நடையைகட்டினர். இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறும் அசார் அலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமு, ஹாகிலும் அரைசதமும் அடித்து வெளியேற, பின்வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டை அறிமுக வீரர் ரெஹான் அஹ்மத்திடம் விட்டுகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்களில் 216 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 


தொடர்ந்து, இங்கிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் ஜாக் க்ராவ்லி களமிறங்கினர். சற்று எளிய இலக்கு என்பதால் 3ம் நாளான நேற்று இருவரும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இருவரும் இணைந்து 11 ஓவர்களில் 87 ரன்கள் குவிக்க, அதிரடியாக விளையாடிய க்ராவ்லி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 


அடுத்ததாக களமிறங்கிய அறிமுக வீரர் ரெஹான் அகமது 10 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் டக்கட்டுடன் இணைந்தார். இருப்பினும் 3ம் நாள் முடிவுக்கு வர 17 ஓவர்கள் முடிபில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. 


வெற்றிக்கு இன்னும் 55 ரன்களே இருந்தநிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெற்றிக்கு தேவையான ரன்களை இருவரும் குவித்து அசத்த, 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது.