திருச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ ,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை முழுமையாக அளித்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும்  பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தச்சங்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த தச்சங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிராஜ் (வயது 32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொத்தனார் என்றும், காரில் புகையிலை பொருடகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (40) உதவியுடன் ராஜஸ்தான், பெங்களூரு புகையிலை பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து கிராமங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 




இதைத்தொடர்ந்து, மணிராஜின் ஆட்டுகொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள சுமார் 40 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து மணிராஜை கைது செய்தனர். இதில் தொடர்புடைய இளையராஜாவை தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் என்ற இடத்தில் அனாதையாக நின்ற ஒருகாரில் ஒரு லட்சம்மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து ஒருகும்பல் அதனை அங்கு விட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து சட்டத்தை மீறி போதை பொருட்களை பதுக்கி வைப்பது, விற்பனை செய்வது, என புகார்கள் வந்தால் உடனடியாக சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.