ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் சூப்பர் 12 க்ரூப் 1-ல் இடம் பிடிக்க, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் சூப்பர் 12 க்ரூப் 2-ல் இடம் பிடித்துள்ளன.
இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். க்ரூப் ஏ: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா; க்ரூப் பி: வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன்.
சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் விரர்களின் விவரத்தை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன. ஒவ்வொரு அணியின் ஸ்குவாட் விவரமும் பின் வருமாறு:
இந்தியா
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஷீத்கான் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக, ரஷீத்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், அணியின் கேப்டனாகவும் பொறுப்பான நபராகவும் அணியை தேர்வு செய்வதில் எனக்கும் பங்கு உண்டு. அணியின் தேர்வு குழு மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யப்பட்ட அணிக்காக எனது ஒப்புதலைப் பெறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிக்கொள்ள முடிவு செய்கிறேன். ஆப்கானிஸ்தான் அணிக்காக எப்போதும் விளையாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். “ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் யார் என்பதை இன்னும் அந்த அணி அறிவிக்கவில்லை. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ்
தென்னாப்ரிக்கா
இங்கிலாந்து
ரிசர்வ் வீரர்கள்: டாம் குரான், லியம் டாசன், ஜேம்ஸ் வின்ஸ்
இலங்கை
அயர்லாந்து
நெதர்லாந்து
நமிபியா
வங்கதேசம்
ஸ்காட்லாந்து
பப்பா நியூ கினியா
ஓமன்
மேலும், அபுதாபியில் நடக்க இருக்கும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயில், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.