T20 World Cup Final : சாரி ப்ரதர்...இதுதான் கர்மா என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் ட்வீட்டுக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வெற்றி பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த அணி வெல்லும் இது 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அக்தர் சாடியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “எம்சிஐ மைதானத்தில் இறுதி போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவோ அல்லது விமானத்தில் மெல்போர்ன் வரவோ இந்திய அணிக்கு தகுதியில்லை.
ஏனெனில் அவர்களின் தரம் அம்பலமாகிவிட்டது” என தெரிவித்திருந்திருந்தார். மேலும் இந்தியாவின் பந்து வீச்சு குறித்து பேசிய அவர், ” முகமது ஷமி ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் தான். ஆனால் அவருக்கு டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இருப்பதற்கு தகுதியில்லை” என அக்தர் சாடியிருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று டி20 உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை, இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதற்கு உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, புராக்கன் ஹாட் போன்ற emoiji-ஐ குறிப்பிட்டிருந்தார். அதாவது, பாகிஸ்தான் அணி தோல்வடைந்ததை சுட்டிக்காட்டி அக்தர் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு இந்திய வீரர் முகமது ஷமி பதில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” சாரி பர்தர்...இதுதான் கர்மா என அக்தர் ட்வீடுக்கு பதிலளித்துள்ளார். இந்த ட்விட்டானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். கலாய்த்து தள்ளியும் மீம்ஸ்களையும் பகிர்ந்தும் வருகின்றனர்.
மேலும் படிக்க