2 நாட்களுக்குள் 34 விக்கெட்டுகள் வீழ்ந்து, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்த பிறகு, முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கப்பா மைதானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.


தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் கப்பா ஸ்டேடியத்தில் டிசம்பர் 17ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.


இந்த ஆட்டம் 2 நாட்களுக்கு முடிவுக்கு வந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய தெநன்னாப்பிரிக்கா, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 152 ரன்களில் ஆட்டமிழந்தது
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் எடுத்து. 


அதைத் தொடர்ந்து, 66 ரன்கள் பின்னிலையில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 2வது நாளில் 99 ரன்களில் சுருண்டது.
34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.


2 நாட்களில் 34 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ஆடுகளத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதையடுத்து, ஐசிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 


ஒட்டுமொத்தமாக கப்பா ஆடுகளம் இந்த டெஸ்ட் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது முடியாத காரியமாக போனது. ஐசிசி வழிகாட்டுதல்களின்படி ஆடுகளம் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஆஸ்திரேலியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது மற்றும் 2023 இல் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளை முடித்த பிறகு ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்தியாவிற்கு வருகை தர உள்ளது.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.