ICC Champions Trophy 2025 Schedule Released: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன்ஸ் டிராபி ஹைப்ரிட் மாடலைப் பயன்படுத்தி, அதாவது நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025


2025 ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.  பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியா செல்ல மறுத்தது. இதையடுத்து, இந்த விவகாரம் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐசிசி சமீபத்தில் முடிவெடுத்தது, "2024-2027 உரிமைகள் சுழற்சியின் போது, ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடத்தப்படும்" என தெரிவித்தது.


இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  2008 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் இரு தரப்பு போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், ஐசிசி தொடர்களில் மட்டும் எதிர்கொண்டன.


துபாயில் ஆட்டம் :


பாகிஸ்தான் அணியானது, கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் மட்டும் கலந்து கொண்டது. மேலும், 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தது.


இந்தியா கடைசியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, இந்தியாவின் போட்டிகளை வேறு நாட்டில் விளையாடும் ஹைப்ரிட் ஹோஸ்டிங் மாடலுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் ஐசிசி தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்புக் கொண்டார்.இதற்கிடையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அட்டவணை:




இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது. முதல் போட்டியானது பிப்ரவர் 19 ஆம் தொடங்கி இறுதி ஆட்டம் மார்ச் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியா மற்றும்  பாகிஸ்தான் மோதும் முதல் ஆட்டமானது பிப்ரவர் 23 ஆம் தேதி , இரு நாடுகளுக்கும் பொதுவான இடமாக துபாயில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.