ப்ரோ கபடி புதிய விதிமுறைகள்
“டை-பிரேக்கர் விதி மிகவும் சுவாரஸ்யமானதும், விளையாட்டுக்கு நல்லதுமாக உள்ளது. இது உங்களுக்கு உங்கள் திறன்களை கூர்மையாக்கவும், முன்னணியில் விளையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய விதியால், ஐந்து ரெய்டர்கள் மைதானத்தில் இருக்கும் அணி சிறப்பாக செயல்படுகிறது. எந்த வீரர் அணியில் இருந்து முன்னேறி விளையாடுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த விதி மாற்றங்கள் சமனில் முடிக்காமல், ஒரு ‘டூ-அர்-டை’ அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. இது ப்ரோ கபடிக்கு ஒரு நேர்மையான முன்னேற்றம். எனக்கு இந்த விதிகள் மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுகின்றன, மேலும் ரசிகர்களும் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள்.”
அணியின் அமைப்பு மற்றும் தந்திரம் குறித்து:
“காகிதத்தில் பார்க்கும்போது ஒருவரும் முக்கிய ரெய்டராக இல்லை. ஆனால் கேப்டனாகவும் மூத்த வீரராகவும், எந்த வீரர் எந்த நிலையில் சிறப்பாக செயல்படுவார் என்பதை நான் கவனிக்க வேண்டும். உதாரணமாக, அர்ஜுன் தேஷ்வால் ஒரு குறிப்பிட்ட டிஃபென்ஸுக்கு எதிராக அதிக புள்ளிகள் எடுக்க முடியும் என்று நான் நினைத்தால், அவரை அனுப்புவது என் கடமை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பங்கு உள்ளது, மேலும் அர்ஜுன் தனது பங்கினை சிறப்பாக செய்கிறார். இந்த சீசனில் ஒரே முக்கிய ரெய்டர் இல்லை; அணியின் தேவைக்கு ஏற்ப செயல் படுத்துவதே முக்கியம்.”
சீசனுக்கான தனிப்பட்ட தயாரிப்பு குறித்து:
“ஒவ்வொரு சீசனும் தானாகவே மாற்றங்கள் நடக்கின்றன. பெரிய மாற்றங்கள் தேவையில்லை; உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும். தற்போது, நான் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை 100% செய்கிறேன். மாற்றங்கள் தொடர்ந்து நடக்கும், ஏனெனில் சீசன் 3-ல் விளையாடிய பவன், சீசன் 12-ல் விளையாடும் பவனைப் போல இல்லை. புதிய வீரர்களுடன் பயிற்சி செய்வதால் புதிய திறன்களை கற்றுக் கொள்கிறீர்கள், அதில் நிறைய கற்றுக் கொள்ள முடியும். திறன்கள் தானாகவே வளர்கின்றன; நீங்கள் அவற்றை மேம்படுத்தினால் போதும். அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.”
மற்ற அணிகள் குறித்து:
“எனக்குப் பிற அணிகள் அனைத்தும் ஒன்றே. ஒவ்வொரு போட்டியும் சவாலானதே. எந்த ஒரு அணி மட்டும் பலமாக உள்ளது என்று இல்லை; எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடுகின்றன. நாங்கள் அதற்கேற்றாற்போல் திட்டமிட்டு விளையாடுவோம். அவர்களின் பலவீனங்களைப் படிப்போம், எங்களுடையவற்றையும் சரிசெய்வோம். எங்களிடம் வலுவான டிஃபென்ஸ் மற்றும் வலுவான ஆப்ஃபென்ஸ் உள்ளது. திட்டத்திற்கேற்ப டிஃபென்ஸ் அல்லது அட்டாக் பயன்படுத்துவோம். அணிக் கூட்டத்தில் அதை விவாதித்து, பிறகு செயல்படுத்துவோம்.”
இன்று இரவு 8:00 மணிக்கு டபாங் டெல்லி K.C., பெங்களூரு புல்ஸ் அணியைச் சந்திக்கிறது. அதனைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் vs பட்னா பைரட்ஸ் மோதல், JioHotstar மற்றும் Star Sports நெட்வொர்க்-இல் நேரடியாகவும், பிரத்யேகமாகவும் ஒளிபரப்பாகிறது.