விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுகளுடன் மக்களின் குரலை பிரதிபலிக்கும் விதமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து வருகிறாரகள். 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்கள், அன்றாடம் மக்கள் எதிர்க்கொள்ளும் விஷயங்கள், சில நேரங்கள் ஜாலியாக பல விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.
மன்னிப்பு கேட்ட படவா கோபி
அந்த வகையில் கடந்த 31ஆம் தேதி தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெருநாய்களை ஆதரித்து பேசியவர்களின் கருத்தை தவறாக காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக இந்த தெருநாய் பிரச்னைதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற படவா கோபி தான் பேசிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். முழு வீடியோவை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சீரியல் நடிகை அம்மு நேற்று மாலை வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். விஜய் டிவியை கடுமையாக தாக்கி பேசினார்.
கோபிநாத் நீங்க என்ன நீதிபதியா?
இந்நிலையில், தங்கம், சந்தியா ராகம் போன்ற சீரியல்களில் நடித்து நடிகை சந்தியா நீயா நானா கோபிநாத்தை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விஜய் டிவியும் கேடு கெட்ட மீடியா லிஸ்டில் இணைந்துவிட்டது. ஒரு பக்கம் இருப்பவர்களை மட்டும் தான் நியாயப் படுத்தனும்னா எதுக்கு இந்த நிகழ்ச்சி. இதுதொடர்பாக நீதிமன்றத்துல கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். இவங்க என்னவோ நீதிபதி மாதிரி இந்த நிகழ்ச்சியை நடத்தி நாய்கள் மீதும், நாய் பாதுகாவலர்கள் மீதும் வெறுப்பை வளர்த்து விடுகிறார்கள். இது ஒரு பொறுப்புள்ள மீடியா பண்ற விஷயமா? கோபிநாத் நீங்க என்ன நீதிபதியா? கோபத்துடன் பேசியுள்ளார். இந்நிலையில், நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தெருநாய்கள் குறித்து நடத்தப்பட்ட விவாதத்தில் தெரு நாய்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நிகழ்ச்சி நடத்தியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.