ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை காலிறுதிக்கு தகுதி பெற்றது.


இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில்,  இங்கிலாந்தின் ரோரி ஈஸ்டன்-சாக் ருஸ் இணையை இந்திய இணை எதிர்கொண்டது.


முதல் கேமை 22-24 என்ற கணக்கில் இந்திய இணை பறிகொடுத்தது. இருப்பினும், இரண்டாவது கேமில் மீண்டெழுந்த இந்திய இணை, 21-15 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேம் பரபரப்புடன் நடந்தது.


அந்த கேமில் இரு நாட்டு வீரர்களுமே வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடினார். இதனால், ஆட்டம் சூடிபிடித்தது. இருப்பினும், இந்திய இணையின் ஆதிக்கம் மேலோங்கியது. அந்த கேமை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றியது ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை.


இவ்வாறாக 2-1 என்ற கணக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. காலிறுதியில் மற்றொரு இங்கிலாந்து இணையை (லேன் பி-வென்டி எஸ்) சந்திக்கிறது ரங்கிரெட்டி இணை.  இந்த ஆட்டம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் மட்டும் களத்தில் உள்ளார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நாளை விளையாடவுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.


தைவானின் லு சிங் யாவ்-யாங்க போ ஹன் இணையை எதிர்கொண்ட இந்திய இணை, 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் போட்டியில் முதல் முறையாக இரட்டையர் பிரிவில் சாம்பியன் வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர்.


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ்-சிராக் ரெட்டி ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்தப் பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்திருந்தது. 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சூ வூயியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமில் இரு ஜோடிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றன. இதன்காரணமாக முதல் கேமை இந்திய ஜோடி 22-20 என்ற கணக்கில் வென்றது. 


Dinesh Karthik Run Out: விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் சர்ச்சை - நடுவரை விமர்சித்த இந்திய ரசிகர்கள்


இந்த போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் சோய்-கிம் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.