மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா ’ஹரே கிருஷ்ணா.. ஹரே ராமா’ பாடல் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து ஹர்தி பாண்டியா பற்றி சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. புதிதாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் இந்த ஐ.பி.எல். சீசனில் தொடக்க ஆட்டங்களில் தோல்வியடைந்ததும் ஹர்திக் பற்றி ரசிகர்கள் எதிர்மறையான கருத்துகளை பேச  காரணமாக இருந்தது. இருந்தாலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். 






ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா


மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் வெற்றியை தொடர்ந்து  ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோயிலுக்கு சென்றுள்ளார். குர்னால் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘Grateful' என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில் ஹர்திக் பாண்டியா,குர்னால் பாண்டியா இருவரும் ‘ஹரே கிருஷ்ணா...ஹரே ராமா.. பாடல் பாடுகின்றனர்.சிறப்பு பூஜையில் பலரும் கலந்துகொண்டது போலான வீடியோவில் அங்குள்ளவர்கள் ஹரே கிருஷ்ணா பாடலை பாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.'Be Like a Bro’ ’proper singer’, ராதா ராதா, என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 


இந்த வீட்டியோவிற்கு இஷான் கிஷன், ’மிஸ்ட் இட்’ என்று கமெண்ட் செய்துள்ளார். ஹர்திக் பாண்டியா பக்தியோடு பாடல் பாடியிருப்பதாவும் அடுத்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வரும் 14-ம் தேதி நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.