இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை அபாரமாக வென்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் நேற்று பிசிசிஐ மீது ரசிகர்கள் கொந்தளிப்பில் இருந்தனர்.  காரணம், பிசிசிஐ சார்பில் அணி வீரர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாகவும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான் என பிசிசிஐ சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 






இதில், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை உண்ண கூடாது எனவும் ஹலால் முறையில் வெட்டப்பட்ட அசைவ உணவுகளை மட்டுமே இந்திய அணி வீரர்கள் சாப்பிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருப்பதாக தகவல் பரவியது. இதனால் இணையவாசிகள் கொந்தளித்தனர். இந்திய அணி வீரர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தவிர்த்து கட்டாயம் செய்வதாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளானர். இதனால், ட்விட்டரில் #BCCI_Promotes_Halal என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.


பூதாகரமாக இந்த விஷயம் வெடித்துள்ள நிலையில் அது குறித்து பிசிசிஐ பொருளாளர்  அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இந்திய டுடேவுக்கு பேசிய அவர், 'வீரர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பிசிசிஐக்கு இல்லை. அவரவர்களின் விருப்படியே வீரர்கள் உணவு சாப்பிட அனுமதிக்கிறார்கள். சாப்பாடு குறித்து எந்த ஆலோசனையும், விதிமுறைகளும் இல்லை. என்ன சாப்பிட வேண்டுமென்பது வீரர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. 




எனக்குத் தெரிந்தவரை, உணவுத் திட்டங்கள் தொடர்பான எந்த வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்கவில்லை. உணவுப் பழக்கத்தைப் பொறுத்த வரையில், அது வீரர்களின் தனிப்பட்ட விருப்பமே.  இதில் பிசிசிஐக்கு எந்தப் பங்கும் இல்லை. சிலர் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மற்ற வீரர்கள் சாப்பிடும் போது அந்த உணவு கலக்காமல் செய்யப்படும். இது வழக்கமானது. இதில் பிசிசிஐ அறிவுறுத்தல் ஏதுமில்லை. சைவமோ, அசைவமோ அது வீரர்களின் விருப்பம் தான். அதற்கான முழு சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இதில் ஒருபோதும் பிசிசிஐ தலையிடுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண