விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விளையாட்டுதுறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்க ரூ. 16. 30 லட்ச நிதியை அரசு விடுவித்தது. 


இதன்மூலம், 2018-2019, 2019- 2020 ஆகிய ஆண்டுகளுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுக்கு தடகள வீரர் மோகன் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


2018-2019 இல் சிறந்த வீரர்களாக பிருத்வி சேகர் (லான் டென்னிஸ்), ஜீவன் நெடுஞ்செழியன் (டென்னிஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அதே ஆண்டுக்கான சிறந்த வீராங்கனைகளாக ஸ்ரீநிவேதா (துப்பாக்கி சுடுதல்), சுனைனா சாரா குருவில்லா (ஸ்குவாஷ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


முழு பட்டியல் விவரம் : 


சிறந்த விளையாட்டு வீரர்கள் - ஆண்கள் (2018-2019)



  • எஸ். பிருத்வி சேகர் - லான் டென்னிஸ்

  • ஜீவன் நெடுஞ்செழியன்- டென்னிஸ்


சிறந்த விளையாட்டு வீரர்கள் - பெண்கள்



  • பி. ஸ்ரீ நிவேதா - துப்பாக்கி சுடுதல்

  • சுனைனா சாரா குருவில்லா - ஸ்குவாஷ்


சிறந்த பயிற்சியாளர்கள்



  • சத்குர்தாஸ்- துப்பாக்கி சுடுதல்

  • கோகிலா - தடகளம்

  • சி.ராஜேஷ் கண்ணா - கால்பந்து


சிறந்த விளையாட்டு இயக்குனர்(PD)



  • எம்.பி. முரளி - பீச் வாலிபால்


சிறந்த நடுவர் 



  • வி.பி.தனபால் - கூடைப்பந்து


சிறந்த அமைப்பாளர்



  • தமிழ்நாடு கூடைப்பந்து


சிறந்த விளையாட்டு வீரர்கள் - ஆண்கள் (2019-2020)



  • பிரஜ்னேஷ் குணேஸ்வரன்- லான் டென்னிஸ்

  • ஆர்.மோகன் குமார் - தடகளம்


சிறந்த விளையாட்டு வீரர்கள் - பெண்கள்



  • பி. அனுஷியா பிரியதர்ஷினி- டேக்வாண்டோ

  • எஸ்.செலினா தீப்தி - டேபிள் டென்னிஸ்


சிறந்த பயிற்சியாளர்கள்



  • கே.எஸ்.முகமது நிஜாமுதீன் - தடகளம்

  • எஸ்.கோகிலா - கால்பந்து


சிறந்த விளையாட்டு இயக்குனர்(PD)



  • ஆர்.ராமசுப்ரமணியன் - பால் பேட்மிண்டன்

  • ஏ.ஆரோக்கியா மெர்சி - வாலிபால்


சிறந்த நடுவர் 



  • டி.சுந்தரராஜ் - கபடி