அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஈரான் நாட்டின் தேசியக் கொடியில் இலச்சினை இல்லாமல் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஈரான் அணியும், அமெரிக்காவும் செவ்வாய்க்கிழமை குரூப் பி பிரிவு ஆட்டத்தில் மோதவுள்ளது. அமெரிக்கா அணி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தையும் அமெரிக்கா டிரா செய்தது. ஈரான் அணி, இங்கிலாந்திடம் 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. 


இருப்பினும் வேல்ஸ் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான். பர்க்கா சரியாக அணியாத குற்றத்திற்காக மராலிட்டி காவலர்களால் ( Morality police ) கைது செய்யப்பட்டு விசாரணையின் போதே உயிரிழந்தார் 22 வயதான மாஃஷா அமினி. அதன் தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக மராலிட்டி காவலர்களின் செயலினையும் அவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் கண்டிக்கும் விதமாக போரட்டங்கள் நடைபெறத் துவங்கின. ஈரானின் வரலாற்றிலேயே பெண்களால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் மாபெரும் போராட்டமிது.


இந்தப் போராட்டத்திற்கு ஈரான் கால்பந்து அணியும் ஆதரவாக தேசிய கீதத்தை பாட மறுத்தனர். இந்நிலையில், இஸ்லாமிய குடியரசை குறித்து இலச்சினை இல்லாமல் அந்நாட்டு அரசின் தேசிய கொடியை அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தனது ட்விட்டரில் வெளியிட்டது.


ஈரானில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இதுபோன்று வைக்கப்பட்டதாக அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்தது. இதற்கு ஈரான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களது கடவுளை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.


ட்விட்டர் மட்டுமல்லாமல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் இதேபோன்றே ஈரானின் தேசிய கொடி காணப்பட்டது.


முன்னதாக, ஈரானில் முதலில் பெண்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தலைமுடியை அறுத்து எதிர்ப்பினை பதிவு செய்யத் துவங்கினார்கள். அதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ஈரானிய பெண்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். 


Lionel Messi: மீண்டும் லெஜண்ட் என நிரூபணம்.. உலகக்கோப்பையில் கோல் மழை.. மரடோனா இடத்தைப்பிடித்த மெஸ்ஸி..!


தங்கள் தலைமுடியினை அறுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதன் மூலமாக மாஃஷா அமினி-யின் மரணத்தினை உலகறியச் செய்ததோடு, மராலிட்டி காவல்துறையினரின் அத்துமீறல்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினர். 






ஆரம்ப நிலையியே, மாஃஷா அமினியின் மரணம் காவல்துறையால் நிகழவில்லையென்றும் அவர் காவல்நிலையத்தில் தாக்கப்படவே இல்லையென்றும் அவரது இறப்பிற்கு காரணம், கைதுக்கு முன்பிருந்த உடல்நலக் கோளாறே என ஈரான் அரசு நிர்வாகம் மறுத்தது.
 
முதலில் மாஃஷா அமினியின் நகரமான சாகேஸ்-ல் துவங்கிய போராட்டம் பின்னர் மக்கள் போராட்டமாக மாறி நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெறத் துவங்கியது. போராட்டங்கள் ஆரம்பமான போதே ஈரானிய அரசு அந்த போராட்டங்களை கடுமையான முறைகளில் தடுத்ததோடு மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக போராட்டங்கள் ஈரான் முழுமைக்கும் பரவத் தொடங்கியதினை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயல அது வன்முறையாக மாறத் துவங்கியுள்ளது. காவல்துறையினர் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட தடைவிதித்து தீவிரமான கண்காணிப்பிற்கும் உள்ளாக்கி உள்ளனர்.