Golden Boot Winner 2022: 22வது உலகக்கோப்பை கால்பந்தில் யார் கோல்டன் பூட் வெல்வார்கள் என நமது ஏபிபி நாடு டிவிட்டர் தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் மேஜிக்கல் மெஸ்ஸி தான் வெல்வார் என தெரியவந்துள்ளது.
மெஸ்ஸியா..? எம்பாப்பே..?
இந்த வாக்கெடுப்பில், அர்ஜெண்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மெர்சல் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸ் அணியின் எம்பாப்வே ஆகியோர் தலா 5 கோல்களுடன் சமநிலையிலும் முதலிலும் உள்ளனர். அதனால் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தான் கோல்டன் பூட்டை வெல்வர். ஆனால், அது யார் என்பதிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் குடிகொண்டுள்ளது. அதில் யாருக்கான ரசிகர்கள் அதிகம் உள்ளனர், யாருக்கு கால்பந்து ரசிகர்களின் திரளான ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஏ.பி.பி. நாடு வாக்கெடுப்பு அமைந்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் மெஸ்ஸிக்கு 70 சதவீத ரசிகர்களும், எம்பாப்வேக்கு 30 சதவீத ரசிகர்களும் வாக்களித்துள்ளனர். கால்பந்து ரசிகர்களின் திரளான ஆதரவு அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்குத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு கோல்டன் பூட்?
எம்பாப்பே இப்போது FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டிக்கு செல்லும் முன் 5 கோல்கள் அடித்து லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருவேளை இருதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால்? லியோனல் மெஸ்ஸியும் கைலியன் எம்பாப்பேயும் ஒரே அளவான கோல்களில் முடித்துவிட்டால் என்ன செய்வார்கள்? உலக கால்பந்து வரலாற்றில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான கோல்டன் பூட் அப்போது யாருக்கு செல்லும்?
ரூல்ஸ் எம்பாப்பேக்கு சாதகமா?
லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே அல்லது வேறு யாரேனும் இந்த லிஸ்டில் வந்து இணைந்து இவர்களோடு முதல் இடத்தை பகிர்ந்து கொண்டால், பெனால்டி கோல்கள் அடிப்படையில் வீரருக்கு கோல்டன் பூட் வழங்கப்படும். இந்த நேரத்தில், லியோனல் மெஸ்ஸி நெதர்லாந்து, குரோஷியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு பெனால்டியை கோலாக மாற்றியுள்ளார், அதே நேரத்தில் எம்பாப்பேவின் அனைத்து கோல்களும் அவுட்பீல்டில் இருந்து வந்தவை. அதனால் கோல்டன் பூட் பந்தயத்தில் எம்பாப்பே முன்னிலையில் இருக்கிறார்.
ஒரு வேளை இருவருமே 5-5 என்று முடித்தாலோ அல்லது இருவருமே இந்த போட்டியில் தலா ஒரு கோல் அடித்து 6-6 என்று முடித்தாலோ, அல்லது அதற்கு மேல் சென்று சமமாக இருக்கும் பட்சத்தில் எம்பாப்பே கோல்டன் பூட் வாங்கி செல்வார். ஒரு வேளை மெஸ்ஸி கோல் அடித்து எம்பாப்பே கோலடிக்கவில்லை என்றால் மெஸ்ஸிக்கு கோல்டன் பூட் வந்து சேரும்.
சமம்:
இப்போது அந்த பிரச்சனை இல்லை, இருந்தாலும், அனுமானமாக மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே பெனால்டி மற்றும் அவுட்ஃபீல்ட் கோல்களின் எண்ணிக்கையிலும் சமமாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்படி இருந்தால் என்ன செய்வார்கள். அப்போது அசிஸ்ட் கோல் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கிறார்கள். யார் அதிக கோலில் பங்கு கொண்டிருக்கிறார் என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். ஒரு வேளை அந்த நிலை வந்திருந்தால் இன்னும் சிக்கல் தான், அசிஸ்ட் கோல்களில் மெஸ்ஸி எம்பாப்பே இருவருமே 11 என்ற கணக்கில் தற்போதைக்கு சமமாக இருக்கிறார்கள் என்பதும் கூடுதலாக கவனிக்கவேண்டியுள்ளது.