FIFA WORLDCUP 2022:உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றைக்கு  4 போட்டிகள் நடக்கின்றன. குரூப் எ, ஈ ஆகிய குரூப்களுக்குள் இன்று போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எ குரூப்பில் உள்ள அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இரவு 8.30 மணிக்கும், குரூப் பி அணிகளுக்குள் நடக்கும் போட்டி நள்ளிரவு 12.30க்கும் நடக்கவுள்ளது. 


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.


இன்றைய போட்டிகள்


குரூப் ஏ


நெதர்லாந்து (8) - கத்தார் (50) - அல் பேத் மைதானம்  இரவு 8.30 மணி 


ஈக்வேடார் (44) - செனகல் (18) கலீஃபா சர்வதேச மைதானம் இரவு 8.30 மணி


குரூப் பி


ஈரான் (20) - அமெரிக்கா (16) அல் துமாமா மைதானம்  நள்ளிரவு 12.30 மணி 


வேல்ஸ் (19) - இங்கிலாந்து (5)  அகமது பின் அலி மைதானம் நள்ளிரவு 12.30 மணி


குரூப் ஏ போட்டிகள்






குரூப் ஏ’வுக்குள் நடக்கும் இன்றைய போட்டிகள் இந்திய நேரப்படி சரியாக இரவு 8.30 மணிக்கு நடக்கவுள்ளது. இதில், கத்தாரை தவிர மற்ற மூன்று அணிகளுக்கும் இன்று நடக்கவுள்ள போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம். குரூப் ஏ’வில் இருந்து அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறுகிறது என்பதை இன்றைய போட்டிகளின் முடிவுகள் தீர்மானிக்கவுள்ளது. நெதர்லாந்து அணி இன்றைய போட்டியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் அதிகம். மற்ற அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள போட்டியானது, இரு அணிகளும் போட்டியை வெல்ல முயற்சிக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.


குரூப் பி போட்டிகள்


குரூப் பி’யில் உள்ள அணிகளுக்கு நடக்கவுள்ள போட்டியானது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இங்கிலாந்து அணி கிட்டதட்ட உறுதி செய்துள்ள நிலையில் இன்றைக்கு வேல்ஸ் அணிக்கு இடையிலான போட்டியை வென்றாலோ,  அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரான் அமெரிக்கா இடையிலான மற்றொரு போடியில் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி, ஈரான் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்று வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.