FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றைக்கு 4 போட்டிகள் நடக்கின்றன. குரூப் எப், ஈ ஆகிய குரூப்களுக்குள் இன்று போட்டிகள் நடக்கவுள்ளன. குரூப் எப் பிரிவில் உள்ள அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இரவு 8.30 மணிக்கும், குரூப் ஈ அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30க்கு தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டிகள்
குரூப் எப்
(குரோஷியா - பெல்ஜியம்) அகமது பின் அலி மைதானம்- இரவு 8.30 மணி
(கனடா - மொராக்கோ) அல் துமாமா மைதானம் இரவு 8.30 மணி
குரூப் ஈ
(ஜப்பான் - ஸ்பெயின்) காலீபா சர்வதேச மைதானம் நள்ளிரவு 12.30 மணி
(கோஸ்டாரிகா - ஜெர்மனி) அல் பயாத் மைதானம் நள்ளிரவு 12.30 மணி
2022 FIFA உலகக் கோப்பை 32 அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட குழு A முதல் H வரை எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு பழக்கமான வடிவமைப்பைப் பின்பற்றும். போட்டியின் குழுநிலையில் ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
கத்தார் FIFA உலகக் கோப்பை 2022 இல் உள்ள குழுக்கள் பின்வருமாறு:
குழு A : கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
குழு B : இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குழு சி : அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
குழு D : பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குழு E : ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்
குழு F : பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
குழு ஜி : பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
குழு எச் : போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா
குழு நிலைக்குப் பிறகு, எட்டு குழுக்களில் இருந்து முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் கட்டத்திற்குச் செல்லும், இது ரவுண்ட் ஆஃப் 16 உடன் தொடங்குகிறது.
அடுத்த சுற்றுக்கான அட்டவணை:
காலிறுதி 1 : டிசம்பர் 9, வெள்ளிக்கிழமை
காலிறுதி 2 : டிசம்பர் 10, சனிக்கிழமை
காலிறுதி 3 : டிசம்பர் 10, சனிக்கிழமை
காலிறுதி 4 : டிசம்பர் 11, ஞாயிறு
அரையிறுதி 1 : டிசம்பர் 14, புதன்கிழமை
அரையிறுதி 2 : டிசம்பர் 15, வியாழன்
3வது இடம் பிளேஆஃப் : டிசம்பர் 17, சனிக்கிழமை
இறுதிப்போட்டி : டிசம்பர் 18, ஞாயிறு