FIFA WORLDCUP 2022: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா குறித்து இந்த தொகுப்பில் விவரமாக காணலாம். 


உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான். 


அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்னும் இரண்டே நாட்களில் தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து  ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது. 


32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. 



FIFA World Cup 2022 (Image Courtesy; FIFAWorldCup)


 


உலகக் கோப்பையை நடத்தும் கத்தார்


1963-ம் ஆண்டு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார் நாடானது, ஒருமுறை கூட உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றதாக வரலாறே இல்லை. ஆனால் இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை தனி நாடாக நடத்துவதால் உலகக் கோப்பை வரலாற்றில்  முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நுழையும் வாய்ப்பை கத்தார் நாடானது பெற்றுள்ளது. மேலும் கத்தார் நாட்டின் மொத்தப் பரப்பளவே 11,581 சதுர கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு கத்தார் எனும் தனிச் சிறப்பினையும் பெறுகிறது. 


மேலும் இந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் முதல் போட்டியிலேயே கத்தார் நாடானது களம் இறங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கத்தார் 80வது அணியாக களம் இறங்குறது. 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் முதல் போட்டி இன்னும் இரு தினங்களில் தொடங்கவுள்ளது. அதாவது வரும் 20-ம் தேதி கத்தாரில் உள்ள அல் பேத் மைதானத்தில் கத்தார் நாடு ஈக்வேடார் நாட்டை எதிர் கொள்ளவுள்ளது. இந்த முதல் போட்டி நடக்கவுள்ள அல்பேத் மைதானமானது சுமார் 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள கால்பந்து மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. 


உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள்


கத்தார் நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 28 லட்சம் தான். ஆனால் கால்பந்து திருவிழாவிற்காக கத்தார் நாடு செய்துள்ள ஏற்பாடுகளை பார்க்கும் போது புருவங்களை உயர்த்தாமல் இருக்க முடியாது. இந்த கால்பந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கத்தார் நாடானது கடந்த 10 வருடங்களாக செய்து வந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்,கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவிற்காக கத்தார் நாடு 220 பில்லியன் டாலர் செலவில் 8 உலகத் தரமான கால்பந்து மைதானங்களை கட்டமைத்துள்ளது. மேலும், உலகம் முழுவதில் இருந்தும் கால்பந்து ரசிகர்கள் வந்து செல்ல தனது உள்நாட்டு விமான நிலையங்களை விரிவாக்கம் செய்துள்ளது. நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல், மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைத்தல், அதிகப்படியான நட்சத்திர விடுதிகளை கட்டமைத்தல் என ஒட்டு மொத்த உலகத்தின் கவனத்தினையும் தன் வசம் ஈர்த்திருக்கிறது கத்தார் நாடு.  இதற்கு முன்னர் அதிகபட்சமாக உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவிற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டித் தொடரில் ரஷ்யா 14 மில்லியன் டாலர் செலவிட்டது தான் அதிகபட்சமாக இருந்தது. 



உலகக் கோப்பை கால்பந்து 2022 (Image Courtesy; FIFAWorldCup)


8 மைதானங்களும் அவற்றின் விபரங்களும்

22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி திருவிழாவிற்காக கத்தாரில் மொத்தம் புதிதாக 7 மைதானங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு மைதானம் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த மைதானங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒருமணி நேர பயண இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானங்களுக்கு விரைவில் செல்லும் படியாக மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மைதானத்திற்ம் மற்றொரு மைதானத்திற்கும் இடையில் உள்ள அதிகபட்சமான தொலைவே 43 மைல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மொத்தம் உள்ள 8 மைதானங்களில் லுசைல் மைதானம் தான் அதிக இருக்கைகளைக் கொண்ட மைதானம். இதில் மொத்தம் 80,000 இருக்கைகள் உள்ளன. கத்தாரில் உள்ள மைதானங்களில் மிகப் பெரிய மைதானமும் லுசைல் மைதானம் தான். அதற்கு அடுத்தபடியாக உள்ள மைதானம் எதுவென்றால், அல் பேத் மைதானம் தான். இதில் மொத்தம் 60,000 இருக்கைகள் உள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் கலீபா சர்வதேச அரங்கம் உள்ளது. இதில் மொத்தம்  45,416 இருக்கைகள் உள்ளன.  மீதமுள்ள ஐந்து  மைதானங்களான   மைதானம் 974,  எஜுகேஷன் சிட்டி மைதானம், அல் துமாமா மைதானம், அல் ஜனுப் மைதானம், அகமது பின் அலி மைதானம் ஆகிய மைதாங்களில் 40,000 இருக்கைகள் உள்ளன.


32 அணிகள் பங்குபெறும் இந்த போட்டித் தொடரில் மொத்தம் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. குழுவுக்கு நான்கு அணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் உள்ளது என்பதை காணலாம். 


குரூப் - A


கத்தார்


ஈக்வேடார்


செனகல்


நெதர்லாந்து


குரூப் - B


இங்கிலாந்து


ஈரான்


அமெரிக்கா


வேல்ஸ்


குரூப் - C


அர்ஜெண்டினா


சவுதி அரேபியா


மெக்சிகோ


போலாந்து


குரூப் - D


பிரான்ஸ்


ஆஸ்திரேலியா


டென்மார்க்


துனிசியா


குரூப் - E


ஸ்பெயின்


கோஸ்டா ரிகா


ஜெர்மனி


ஜப்பான்


குரூப் - F


பெல்ஜியம்


கனடா


மொராக்கோ


குரோஷியா


குரூப் - G


பிரேசில்


செர்பியா


சுவிட்சர்லாந்து


குரூப் - H


போர்ச்சுக்கல்


கானா


உருகுவே


தென் கொரியா


ஒவ்வொரு குழுவில் உள்ள அணியும் தனது குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும், இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 16 அணிகள் நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதன் பின்னர் கால் இறுதிப் போட்டி, அதன் பின்னர் அரை இறுதிச் சுற்று அதன் பின்னர் இறுதிப் போட்டி நடைபெறும். லீக் சுற்றுக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


கால்பந்து போட்டி அட்டவணை 


நவம்பர் 20


கத்தார் vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி


நவம்பர் 21 


செனகல் vs  நெதர்லாந்து - பிற்பகல் 3.30 மணி


இங்கிலாந்து vs  ஈரான் - மாலை 6.30 மணி 


நவம்பர் 22


அமெரிக்கா vs வேல்ஸ் - அதிகாலை 12.30 மணி 


அர்ஜெண்டினா  vs சவுதி அரேபியா - பிற்பகல் 3.30 மணி 


டென்மார்க் vs துனிசியா - மாலை 6.30 மணி 


மெக்சிகோ vs போலாந்து - இரவு 9.30 மணி 


நவம்பர் 23 


பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - அதிகாலை 12.30 மணி 


மொராக்கோ vs குரேஷியா - பிற்பகல் 3.30 மணி 


ஜெர்மனி vs ஜப்பான் -  மாலை 6.30 மணி 


ஸ்பெயின் vs கோஸ்டா ரிகா - இரவு 9.30 மணி 


நவம்பர் 24 


பெல்ஜியம் vs கனடா - அதிகாலை12.30 மணி 


சுவட்சர்லாந்து vs கேமரூன் - பிற்பகல் 3.30 மணி 


உருகுவே vs தென்கொரியா - மாலை 6.30 மணி


போர்ச்சுக்கல் vs கானா - இரவு 9.30 மணி


நவம்பர் 25 


பிரேசில் vs செர்பியா- அதிகாலை 12.30 மணி


வேல்ஸ் vs ஈரான் - பிற்பகல் 3.30 மணி


கத்தார் vs செனகல் - மாலை 6.30 மணி 


நெதர்லாந்து vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி 


நவம்பர் 26


இங்கிலாந்து vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி 


துனிசியா vs ஆஸ்திரேலியா - பிற்பகல் 3.30 மணி 


போலாந்து vs சவுதி அரேபியா - மாலை 6.30 மணி


பிரான்ஸ் vs டென்மார்க் - இரவு 6.30 மணி 


நவம்பர் 27


அர்ஜெண்டினா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி


ஜப்பான் vs கோஸ்டா ரிகா - பிற்பகல் 3.30 மணி


பெல்ஜியம் vs மொராக்கோ - மாலை 6.30 மணி 


குரோஷியா vs கனடா - இரவு 9.30 மணி 


நவம்பர் 28 


ஸ்பெயின் vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி


கேமரூன் vs செர்பியா - பிற்பகல் 3.30 மணி 


தென் கொரியா vs கானா - மாலை 6.30 மணி


பிரேசில் vs சுவட்சர்லாந்து - இரவு 9.30 மணி 


நவம்பர் 29 


போர்ச்சுக்கல் vs உருகுவே - அதிகாலை 12.30 மணி 


நெதர்லாந்து vs கத்தார் - இரவு 8.30 மணி


ஈக் வேடார் vs செனகல் - இரவு 8.30 மணி 


நவம்பர் 30 


வேல்ஸ் vs இங்கிலாந்து - அதிகாலை 12.30 மணி 


ஈரான் vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி 


துனிசியா vs பிரான்ஸ் - இரவு 8.30 மணி 


ஆஸ்திரேலியா vs டென் மார்க் - இரவு 8.30 மணி 


டிசம்பர் 1


போலாந்து vs அர்ஜெண்டினா - அதிகாலை 12.30 மணி 


சவுதி அரேபியா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி 


குரோஷியா vs பெல்ஜியம் - இரவு 8.30 மணி


கனடா vs மொராக்கோ - இரவு 8.30 மணி 


டிசம்பர் 2


ஜப்பான் vs ஸ்பெயின் - அதிகாலை 12.30 மணி 


கோஸ்டா ரிகா vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி 


தென் கொரியா vs போர்ச்சுக்கல் - இரவு 8.30 மணி 


கானா vs உருகுவே - இரவு 8.30 மணி 


டிசம்பர் 3 


கேமரூன் vs பிரேசில் - அதிகாலை 12.30 மணி 


செர்பியா vs சுவிட்சர்லாந்து - அதிகாலை 12.30 மணி 



உலகக் கோப்பை கால்பந்து 2022 (Image Courtesy; FIFAWorldCup)


 


லைவ் டெலிகாஸ்ட்


இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலககோப்பை போட்டியானது ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹெடி மற்றும் ஜியோ சினிமாஸ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்படும்.