மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகளுக்கு இன்று உலக்கோப்பைத் தொடரில் பலபபரீட்சைகள் காத்திருக்கின்றன. 


உலகக்கோப்பை திருவிழா:


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.


முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடாரும் மோதின. அந்த ஆட்டத்தில் ஈகுவடார் 0-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. இன்று ஒரே நாளில் 4 ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று நடைபெற்ற 13ஆவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது.


நேற்று செனகலுடன் நடந்த போட்டியில் கத்தார் அடைந்த தோல்வியால் கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் இருந்து முதல் அணியாக வெறியேறுகிறது. போட்டியின் ஏழாவது நாளான இன்று, உலக்த் தரவரிசையில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகளுக்கு இன்று உலக்கோப்பைத் தொடரில் பலபபரீட்சைகள் காத்திருக்கின்றன. இன்று மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டி மட்டும் இந்திய நேரப்படி,  நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது.


இன்றைய போட்டிகள்


குரூப் டி


1. துனிசியா (30) - ஆஸ்திரேலியா (38) (மாலை 3.30 மணி)


குரூப் சி


2. போலாந்து (26) - சவுதி அரேபியா (51) (மாலை 6.30 மணி)


குரூப் டி


3. பிரான்ஸ் (4) - டென்மார்க் (10) (இரவு 9.30 மணி)


குரூப் சி


அர்ஜெண்டினா (3) - மெக்சிகோ (13) (நள்ளிரவு 12.30 மணி)


 


பிரான்ஸ் (4) - டென்மார்க் (10) - இரவு 9.30 மணி


உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி 10வது இடத்தில் உள்ள டென்மார்க் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் வென்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளைப் பொறுத்தமட்டில் சரிசமமான பலத்துடன் காணப்படுகின்றன. பிரான்ஸ் இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் விளையாடி வெற்றியும் பெற்றுள்ளது. மேலும், டென்மார்க் அணி ஒரு போட்டியில் விளையாடி டிரா அடைந்துள்ளது. எனவே இந்த போட்டி டென்மார்க் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். இந்த போட்டி 974 மைதானத்தில் இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. 


நட்சத்திர வீரர்கள் 


பிரான்ஸ் -  ஆலிவர் கிர்ட்


டென்மார்க் - ஆண்ட்ரஸ் ஸ்கோவ், காஸ்பெர்க் டெல்பார்ஹ்


அர்ஜெண்டினா (3) - மெக்சிகோ (13) (நள்ளிரவு 12.30 மணி)


உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா அணி 13வது இடத்தில் உள்ள மெக்சிகோ அணியுடன் மோதவுள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் இன்னும் வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும், மெக்சிகோவின் கோல் கீப்பருக்கும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கும் இடையிலான பனிப்போரினை ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நடத்திவரும் நிலையில், அது மைதானத்தில் இன்றைக்கு வெளிப்படும் என எதிர்பார்க்கலாம். இரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி  லுசாயில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


இதுவரை நேருக்கு நேர் - 35


அர்ஜெண்டினா - 16


மெக்சிகோ - 5


டிரா - 14