உலகக் கோப்பை போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் பல நாள் கனவை நிறைவேற்ற களத்தில் விளையாடும் இரு அணியின் 22 வீரர்களும் வெற்றியை உயிராய் கருதி விளையாடுவர். இப்படியாக பரபரப்பாக உள்ள இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது.
மொத்தம் 32 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, 29 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 64 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது முதல் முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றன. போட்டிகள் இன்னும் நான்கு நாட்களில் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டாலும், இந்த முறை கோப்பையை வெல்லும் அணி என ஒரு சில அணிகள் மீதே நம் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
32 அணிகள் பங்குபெறும் இந்த போட்டித் தொடரில் மொத்தம் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. குழுவுக்கு நான்கு அணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் உள்ளது என்பதை காணலாம்.
குரூப் - A
கத்தார்
ஈக்வேடார்
செனகல்
நெதர்லாந்து
குரூப் - B
இங்கிலாந்து
ஈரான்
அமெரிக்கா
வேல்ஸ்
குரூப் - C
அர்ஜெண்டினா
சவுதி அரேபியா
மெக்சிகோ
போலாந்து
குரூப் - D
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
டென்மார்க்
துனிசியா
குரூப் - E
ஸ்பெயின்
கோஸ்டா ரிகா
ஜெர்மனி
ஜப்பான்
குரூப் - F
பெல்ஜியம்
கனடா
மொராக்கோ
குரோஷியா
குரூப் - G
பிரேசில்
செர்பியா
சுவிட்சர்லாந்து
குரூப் - H
போர்ச்சுக்கல்
கானா
உருகுவே
தென் கொரியா
ஒவ்வொரு குழுவில் உள்ள அணியும் தனது குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும், இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 16 அணிகள் நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதன் பின்னர் கால் இறுதிப் போட்டி, அதன் பின்னர் அரை இறுதிச் சுற்று அதன் பின்னர் இறுதிப் போட்டி நடைபெறும். லீக் சுற்றுக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டி அட்டவணை
நவம்பர் 20
கத்தார் vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி
நவம்பர் 21
செனகல் vs நெதர்லாந்து - பிற்பகல் 3.30 மணி
இங்கிலாந்து vs ஈரான் - மாலை 6.30 மணி
நவம்பர் 22
அமெரிக்கா vs வேல்ஸ் - அதிகாலை 12.30 மணி
அர்ஜெண்டினா vs சவுதி அரேபியா - பிற்பகல் 3.30 மணி
டென்மார்க் vs துனிசியா - மாலை 6.30 மணி
மெக்சிகோ vs போலாந்து - இரவு 9.30 மணி
நவம்பர் 23
பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - அதிகாலை 12.30 மணி
மொராக்கோ vs குரேஷியா - பிற்பகல் 3.30 மணி
ஜெர்மனி vs ஜப்பான் - மாலை 6.30 மணி
ஸ்பெயின் vs கோஸ்டா ரிகா - இரவு 9.30 மணி
நவம்பர் 24
பெல்ஜியம் vs கனடா - அதிகாலை12.30 மணி
சுவட்சர்லாந்து vs கேமரூன் - பிற்பகல் 3.30 மணி
உருகுவே vs தென்கொரியா - மாலை 6.30 மணி
போர்ச்சுக்கல் vs கானா - இரவு 9.30 மணி
நவம்பர் 25
பிரேசில் vs செர்பியா- அதிகாலை 12.30 மணி
வேல்ஸ் vs ஈரான் - பிற்பகல் 3.30 மணி
கத்தார் vs செனகல் - மாலை 6.30 மணி
நெதர்லாந்து vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி
நவம்பர் 26
இங்கிலாந்து vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி
துனிசியா vs ஆஸ்திரேலியா - பிற்பகல் 3.30 மணி
போலாந்து vs சவுதி அரேபியா - மாலை 6.30 மணி
பிரான்ஸ் vs டென்மார்க் - இரவு 6.30 மணி
நவம்பர் 27
அர்ஜெண்டினா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி
ஜப்பான் vs கோஸ்டா ரிகா - பிற்பகல் 3.30 மணி
பெல்ஜியம் vs மொராக்கோ - மாலை 6.30 மணி
குரோஷியா vs கனடா - இரவு 9.30 மணி
நவம்பர் 28
ஸ்பெயின் vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி
கேமரூன் vs செர்பியா - பிற்பகல் 3.30 மணி
தென் கொரியா vs கானா - மாலை 6.30 மணி
பிரேசில் vs சுவட்சர்லாந்து - இரவு 9.30 மணி
நவம்பர் 29
போர்ச்சுக்கல் vs உருகுவே - அதிகாலை 12.30 மணி
நெதர்லாந்து vs கத்தார் - இரவு 8.30 மணி
ஈக் வேடார் vs செனகல் - இரவு 8.30 மணி
நவம்பர் 30
வேல்ஸ் vs இங்கிலாந்து - அதிகாலை 12.30 மணி
ஈரான் vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி
துனிசியா vs பிரான்ஸ் - இரவு 8.30 மணி
ஆஸ்திரேலியா vs டென் மார்க் - இரவு 8.30 மணி
டிசம்பர் 1
போலாந்து vs அர்ஜெண்டினா - அதிகாலை 12.30 மணி
சவுதி அரேபியா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி
குரோஷியா vs பெல்ஜியம் - இரவு 8.30 மணி
கனடா vs மொராக்கோ - இரவு 8.30 மணி
டிசம்பர் 2
ஜப்பான் vs ஸ்பெயின் - அதிகாலை 12.30 மணி
கோஸ்டா ரிகா vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி
தென் கொரியா vs போர்ச்சுக்கல் - இரவு 8.30 மணி
கானா vs உருகுவே - இரவு 8.30 மணி
டிசம்பர் 3
கேமரூன் vs பிரேசில் - அதிகாலை 12.30 மணி
செர்பியா vs சுவிட்சர்லாந்து - அதிகாலை 12.30 மணி
லைவ் டெலிகாஸ்ட்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலககோப்பை போட்டியானது ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹெடி மற்றும் ஜியோ சினிமாஸ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்படும்.